Home
Mobile

புதுசு வந்ததும் பழசு விலை குறைப்பு: ரூ.74,999 Samsung போனை மிட்-ரேன்ஜ் விலையில் வாங்கலாம்!

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அறிமுகமான போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Samsung Galaxy S21 FE ஆனது Flipkart இல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ப்ரீமியம் 5ஜி போனானது பல வாடிக்கையாளர்களை கவர்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் ப்ரீமியம் போனை வாங்கத் திட்டமிட்ட பலருக்கும் இது சிறந்த தேர்வாக இருந்திருக்கிறது. தற்போது இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

ரூ.74,999 Samsung போனை மிட்-ரேன்ஜ் விலையில் வாங்கலாம்!

Samsung Galaxy S21 FE

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் இல் சிறந்த தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ப்ரீமியம் விலை 5ஜி போனை தற்போது மிட் ரேன்ஜ் விலையில் வாங்கலாம். இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் கூடுதலாக வங்கித் தள்ளுபடிகள் எதுவும் வழங்கவில்லை. அப்படி வழங்கி இருந்தால் இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கி இருக்கலாம். இருப்பினும் இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது.

46% தள்ளுபடி

தள்ளுபடி விவரத்தை பார்க்கலாம், சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.74,999 என்ற விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ப்ரீமியம் 5ஜி போனுக்கு 46 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனை ரூ.39,999 என வாங்கலாம். இந்த தள்ளுபடியை பெறுவதற்கு விதிமுறைகள் நிபந்தனைகள் எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ரூ.39,999 மட்டுமே

சாம்சங் Galaxy S21 FE ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.74,999 என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த போனை பிளிப்கார்ட்டில் ரூ.39,999 என வாங்கலாம். Lavender வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Galaxy S21 FE சிறப்பம்சங்கள்

6.4 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 12 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் ஓஐஎஸ் ஆதரவு கொண்ட 8 எம்பி மூன்றாம் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா இதில் இருக்கிறது. இதன் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது இதில் 5ஜி ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது.

ரூ.74,999 Samsung போனை மிட்-ரேன்ஜ் விலையில் வாங்கலாம்!

மறுபெயரிடப்பட்ட பதிப்பு

சரி, இப்போது ஒரு கேள்வி வரும், சாம்சங் கேல்கஸி எஸ்22 எஃப்இ என்ற புதிய பதிப்பு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகும் நேரத்தில் இந்த போனை வாங்கலாமா வேண்டாமா என்று. இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது. சாம்சங் நிறுவனத்துக்கு சாம்சங் கேலக்ஸி ஏ74ஐ இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமில்லை எனவும் அதே போனை கேலக்ஸி எஸ்22 எஃப்இ என அறிமுகம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

108 எம்பி முதன்மை கேமரா

Samsung Galaxy S22 FE ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா உடன் 2023 இல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது Exynos 2200 SoC அல்லது Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது 2023 இல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

வாங்கலாமா, வேண்டாமா?

கேலக்ஸி எஸ்22 எஃப்இ குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. எனவே தள்ளுபடி விலையில் சிறந்த அம்சங்கள் கொண்ட ப்ரீமியம் 5ஜி போனான Galaxy S21 FE போனை இப்போதே வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs.74,999 Smartphone Now Rs.39,999: Samsung Galaxy S21 FE Available at Huge Discount Price in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X