Home
Mobile

ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?

ரூ.6,999 என்ற உடன் ஸ்மார்ட்போனை மலிவாக எண்ணி விட வேண்டாம். இதன் பெரும்பாலான அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் என பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது. ரூ.10,000 டூ ரூ.15,000 விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அம்சங்கள் இதில் இருக்கிறது.

ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்..

Tecno Spark Go (2023) இந்தியாவில் அறிமுகம்

சீன டிரான்ஷன் ஹோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னோ மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனானது 3 வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் என பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது.

ரூ.7,000க்கு கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன்

டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை தான் ரூ.6,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற வேரியண்ட்களான 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

ஸ்மார்ட்போன் வண்ண விருப்பங்கள்

புதிய டெக்னோ ஸ்மார்ட்போனானது பிளாக், நெபூலா பர்ப்பிள் மற்றும் உயுனி ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் தற்போதே விற்பனைக்கு கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டெக்னோ ஸ்பார்க் கோ 2022 ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் மாதம் 2021 இல் வெளியானது. இதன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.7,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்..

Tecno Spark Go (2023) சிறப்பம்சங்கள்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த போன் டூயல் சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 6.56 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 720x1,612 பிக்சல் தீர்மான ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 480 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை மற்றும் 90 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதமாக இதில் இருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஏ22 SoC சிப்செட்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ22 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் 4 ஜிபி ரேம் ஆதரவு இதில் உள்ளது. விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு ஆதரவும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

டூயல் ரியர் கேமரா அமைப்பு

இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. அதாவது 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என இதன் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 64 ஜிபி வரையிலான சேமிப்பக ஆதரவு இதில் வழங்கப்பட்டிருந்தாலும் பிரத்யேகமாக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் இதில் இருக்கிறது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

5,000mAh பேட்டரி உடன் நீடித்த பேட்டரி ஆயுள்

இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பாதுகாப்பு வசதிக்கு என ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கு 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 32 மணிநேர காத்திருப்பு நேரம், 12 மணிநேர கேமிங், 124 மணிநேரத்துக்கும் மேல் இசை மற்றும் 25 மணிநேர வீடியோ ப்ளேபேக் டைம் அணுகலை இந்த பேட்டரி மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs.6,999 Priced Smartphone Launched in India With Up to 124 Hours Battery Backup: Tecno Spark Go (2023) Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X