ரூ.4,500 டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.25,000 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி.. 6000mAh பேட்டரி.. சாம்சங் போன் வேற!
108எம்பி கேமரா, அமோலெட் பிளஸ் டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1380 சிப்செட், 1டிபி மெமரி சப்போர்ட், 6000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எப் 54 (Samsung Galaxy F54) போனுக்கு முழுதாக ரூ.4,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் போன்களின் கேமரா, டிஸ்பிளே மற்றும் சிப்செட் அம்சங்களை பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது. ஏனென்றால், ஆப்பிள் போன்களுக்கு அடுத்தப்படியாக சாம்சங் போன்களில் மட்டுமே சிறந்த கேமரா சென்சார் வருகிறது. அதிலும் சாம்சங் போன்களின் மிட்-ரேஞ்ச் மாடல்களில் மெயின் கேமரா மட்டுமல்லாமல், செல்பீ கேமராவும் பட்டையை கிளப்பும்படி இருக்கும்.

அந்த வரிசையில், சாம்சங் கேலக்ஸி எப் 54 போன் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதன் கேமரா மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களும் பெரிதும் பேசப்பட்டது. இவ்வளவு பெயர்பெற்ற இந்த போனுக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அத்தி பூத்தது போல ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் பின்வருமாறு.
சாம்சங் கேலக்ஸி எப் 54 அம்சங்கள் (Samsung Galaxy F54 Specifications): இந்த சாம்சங் போன் 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 ஓஎஸ் (Samsung One UI 5.1) உடன் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1380 (Octa-Core Exynos 1380) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போன் பக்காவான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது.
அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பேட்டரி பேக்கப் பற்றி கவலைப்பட வேண்டியது கிடையாது. மேலும், டைப் - சி ஆடியோ, பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.3, நாவ்ஐசி (NavIC), என்ஃஎப்சி போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போன் ஜூன் 6ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்தது. அப்போது, இதன் விலை ரூ.29,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், இப்போது, ரூ.4,500 தள்ளுபடியை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. அதாவது, இந்த போனை பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும்போது, ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், ரூ.2,500 கேஸ் பேக் கொடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், எந்த வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆர்டர் செய்தாலும் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். உங்களிடம், ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டு இருந்தால், இந்த இரண்டு ஆஃபர்களையும் பெற முடியும். மேலும், ரூ. 29,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
ஆகவே, ரூ.4,500 தள்ளுபடியை பெற்று ரூ.29,000 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி எப் 54 போனை வெறும் ரூ.25,499க்கு வாங்கிக் கொள்ள முடியும். இந்த ஆஃபர் குறுகிய காலத்துக்கு மட்டுமே பொருந்தும். இந்த போனை வாங்க விருப்பமுள்ளவர்கள் உடனடியாக ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








