Home
Mobile

அடிச்சான் பாரு.. ரூ.500, ரூ.1000 இல்ல.. முழுசா ரூ.3000 விலை குறைப்பை பெற்ற OnePlus போன்.. என்ன மாடல்?

கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.3000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) மீதுதான் ரூ.3,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு 8ஜிபி ரேம் + 128 ஜிபிஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகமானது.

முழுசா ரூ.3000 விலை குறைப்பை பெற்ற OnePlus போன்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் 11ஆர் பழைய விலை VS புதிய விலை: ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.2,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு, தற்போது இது ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.39,999 ஆகும்

இதேபோல மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு, தற்போது இது ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.44,999 ஆகும். ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் இந்த புதிய விலை நிர்ணயங்கள் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பிரதிபலிக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முழுசா ரூ.3000 விலை குறைப்பை பெற்ற OnePlus போன்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: சோனிக் பிளாக் மற்றும் கேலடிக் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் பிளாட்ஃபாரம் (Octa-Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile Platform) மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது.

முழுசா ரூ.3000 விலை குறைப்பை பெற்ற OnePlus போன்.. என்ன மாடல்?

இதன் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, டிஸ்பிளேவில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் எஸ் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 13 உடன் வருகிறது மற்றும் டூயல் நானோ சிம் கார்டுகளை ஆதரிக்கிறது.

முழுசா ரூ.3000 விலை குறைப்பை பெற்ற OnePlus போன்.. என்ன மாடல்?

ரூ.37,999க்கு இறங்கி வந்துள்ள ஒன்பிளஸ் 11ஆர்-ஐ நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக வாங்கலாம்! இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் கொண்டு இயங்கும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இதில் சோனி IMX890 சென்சாரை கொண்ட மெயின் கேமராவும் உள்ளது. மேலும் இது பெரிய பேட்டரி, சிறந்த டிஸ்பிளே, ஐபி54 ஸ்பிளாஷ்-ப்ரூஃப் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் புதிய ஒன்பிளஸ் 12ஆர் மாடலை வாங்க விரும்பினால். இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.39,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.45,999 க்கும் வாங்க கிடைக்கிறது. அதாவது கூடுதலாக ரூ.2000 செலவு செய்தால்.. பழைய ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனிற்கு பதிலாக புதிய ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 3000 Price Cut on OnePlus 11R Smartphone But you Can Buy New OnePlus 12R By Paying Extra Rs 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X