வெளுத்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.21000 பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் சோனி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி, ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி (OnePlus Nord CE4 5G) பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 விலை (OnePlus Nord CE4 Price): இந்த நோர்ட் போன் அறிமுகமானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.3000 டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது.

இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனை வாங்கலாம். இதுபோக ரூ.23,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் மிரளவிடும் கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்களை பேக் செய்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 Specifications): லேட்டஸ்ட் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உடன் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
இந்த கேமராவில் 20X டிஜிட்டல் ஜூம் (20x Digital Zoom) சப்போர்ட் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) வருகிறது. ஆட்டோபோகஸ் (Autofocus) சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
இந்த போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) வருகிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் 100W சூப்பர்வூக் சார்ஜிங் (SUPERVOOC Charging) கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), ஹை-ரெஸ் (Hi-Res) ஆடியோ வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் உள்ளது. டார்க் குரோம் (Dark Chrome) மற்றும் செலடன் மார்பிள் (Celadon Marble) ஆகிய 2 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் பேட்டரி சிஸ்டம் மற்றும் கேமர சிஸ்டம் கொண்ட போன் வேண்டுமானால், இந்த ஒன்பிளஸ் மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications








