ரூ.20,000 டிஸ்கவுண்ட் + ரூ.14,000 பேங்க் ஆபர்.. சர்ர்னு இறங்கிய.. பிரபல Samsung போனின் விலை.. என்ன மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டப்பிள் ஸ்மார்ட்போன்களான (Foldable Smartphones) கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Galaxy Z Fold 6) மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 6 (Galaxy Z Flip 6) மாடல்களின் அறிமுகம் கூடிய விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் கேலக்ஸி இஸட் போல்ட் 5 உடன் சேர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகமான கேலக்ஸி இஸட் பிளிப் 5 ஸ்மார்ட்போன் மீது "நம்ப முடியாத" அளவிலான 2 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதென்ன சலுகைகள்? கேலக்ஸி இஸட் பிளிப் 5-ன் முக்கிய அம்சங்கள் என்ன? கேலக்ஸி இஸட் பிளிப் 6 மற்றும் கேலக்ஸி இஸட் போல்ட் 6 எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

கேலக்ஸி இஸட் பிளிப் 6 மற்றும் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஆகிய இரண்டும், மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ரிங் (Galaxy Ring) உடன் சேர்த்து, அடுத்த சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு (Samsung Galaxy Unpacked) நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி இஸட் பிளிப் 6 மற்றும் கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஆகிய இரண்டுமே கேலக்ஸி இஸட் பிளிப் 5 மற்றும் கேலக்ஸி இஸட் போல்ட் 5 ஆகிய மாடல்களுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் "சற்றே பழைய" கேலக்ஸி இஸட் பிளிப் 5 மீது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் சில அபாரமான ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகமானது. இருப்பினும் தற்போது இது அமேசானில் ரூ.20,000 என்கிற உடனடி தள்ளுபடி கூப்பனின் கீழ் ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் நீங்கள் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ. 14,000 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக கேலக்ஸி இஸட் பிளிப் 5-ன் இறுதி விலையை ரூ.75,999 ஆக குறைக்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்விரு வேரியண்ட்களுமே க்ரீம், கிராஃபைட், லாவெண்டர் மற்றும் மின்ட் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் FHD+ (1080x 2640 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளேவை (120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்) கொண்டுள்ளது. கூடவே 3.4-இன்ச் சூப்பர் AMOLED ஃபோல்டர்-ஷேப்டு கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் பிளாட்ஃபார்மின் கீழ் இயங்குகிறது
கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது. அதில் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ப்ரைமரி கேமரா + 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உள்ளது. செல்பீக்களுக்கான இதில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது; இது ஃபோல்டிங் டிஸ்பிளேவின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 3700mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








