முழுசா ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. இனி இந்த Samsung போன் டிமாண்ட் ஆவதை யாராலயும் தடுக்க முடியாது.. மே 2 முதல்!
மே 2 முதல் தொடங்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது.. சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.20,000 தள்ளுபடி கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? வேறு என்னென்ன போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ரூ.20,000 டிஸ்கவுண்ட்டை பெறுவது எந்த மாடல்? சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் தான். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் வெளியீட்டு விலை ரூ.64,999 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் (Flipkart Big Saving Days sale) போது இது ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த பிரத்யேக சலுகையில் ரூ.2,000 பேங்க் கேஷ்பேக்கும் (Bank Cashback) அடங்கும். பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது மே 3, 2024 முதல் தொடங்கும். இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ்23 மீதான இந்த சலுகை மே 2 அன்று பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான சாம்சங்.காம் (Samsung.com) வழியாக அணுக கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது சர்க்கிள் டு சர்ச் (Circle to Search), லைவ் டிரான்ஸ்லேட் மற்றும் ஃபோட்டோ அசிஸ்ட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Octa-core Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் கேமரா, 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் ஓஐஎஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமரா உள்ளது. 3900எம்ஏச் பேட்டரி உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
கடைசியாக இது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Adaptive Refresh Rate), 1750 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் லேயர் ப்ரொடெக்ஷன் (Gorilla Glass Victor Layer Protection) உடனான 6.1 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

பிளிப்கார்ட்டை போலவே அமேசான் (Amazon) வலைத்தளமும் கூட 2024 ஆம் ஆண்டிற்கான தனது கிரேட் சம்மர் சேல்-ஐ (Amazon Great Summer Sale 2024) அறிவித்துள்ளது. இது மே 2 ஆம் தேதி மதியம் முதல் தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும் என்கிற ஒரு பட்டியலும் அமேசான் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் சரியான தள்ளுபடி விலைகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, என்னென்ன மாடல்கள் மீது தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. அதன்படி ஐபோன் 13 (iPhone 13), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4), ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G), சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையின்கீழ் வாங்க கிடைக்கும்.
மேலும் ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G), ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G), ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G), போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G), ஹானர் எக்ஸ்9பி 5ஜி (Honor X9b 5G), டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மீதும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








