Home
Mobile

வெறும் ரூ.19,000 பட்ஜெட்டில்.. 24GB ரேம், 5100mAh பேட்டரி, 64MP கேமரா, Flow AMOLED டிஸ்பிளே.. என்ன மாடல்?

24ஜிபி வரையிலான ரேம், ஃப்ளோ அமோஎல்இடி டிஸ்பிளே உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ள போக்கோ ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது திடீர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? திடீர் தள்ளுபடியை பெற்றுள்ளது போக்கோ எக்ஸ்6 5ஜி (POCO X6 5G) ஸ்மார்ட்போன் தான். தற்போது இந்த 5ஜி மாடலானது, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ரூ.19,000 பட்ஜெட்டில்.. 24GB ரேம், 5100mAh பேட்டரி, 64MP கேமரா!

நினைவூட்டும் வண்ணம் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது எந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் இல்லாமல் (பிளிப்கார்ட் வழியாக) ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அதாவது இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 பிளாட் டிஸ்கவுண்ட் (Flat Discount) கிடைக்கிறது. அறியாதோர்களுக்கு பிளாட் டிஸ்கவுண்ட் என்றால் எந்த விதமான வங்கி சலுகையும் (Bank Offer), எக்ஸ்சேன்ஜ் சலுகையும் (Exchange Offer) இல்லாமல் நேரடியாக கிடைக்கும் தள்ளுபடி ஆகும்.

ரூ.19,000 பட்ஜெட்டில்.. 24GB ரேம், 5100mAh பேட்டரி, 64MP கேமரா!

ஒருவேளை போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க, நீங்கள் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பயன்படுத்தி வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் உங்களுக்கு ரூ.17,500 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸை (Exchange Bonus) வழங்கும். இதற்காக நீங்கள் நல்ல முறையில் இயங்கும், டேமேஜ் ஆகாத, உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக வாங்கலாம்! ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன், இதே பட்ஜெட்டில் கிடைக்கும் அதன் மற்ற போட்டியாளர்களை விட ஷார்ப் ஆன டிஸ்பிளேவை வழங்குகிறது. மேலும் இது திறமையான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கூடுதலாக இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5100mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

ரூ.19,000 பட்ஜெட்டில்.. 24GB ரேம், 5100mAh பேட்டரி, 64MP கேமரா!

போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் 1.5கே (1220 x 2712 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

இதுதவிர விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த ரேம்-ஐ 24ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும். அறிமுகமாகும் போதே, ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் வரும் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்6 5ஜி-யின் கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உடனான 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

கடைசியாக போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5100mAh பேட்டரியை பேக் செய்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. ஷார்ப் ஆன டிஸ்பிளே, மல்டி-டாஸ்கிங் பெர்ஃபார்மென்ஸ், விலைக்கு ஏற்ற கேமரா, நல்ல பேட்டரி லைஃப்பை வழங்கும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை தேடும் எவருமே போக்கோ எக்ஸ்6 5ஜி மாடல் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 2000 Flat Discount on Poco X6 5G Can We Use This Flipkart Offer Or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X