Home
Mobile

ரூ.2000 விலை குறைப்பு.. 108MP கேமரா, 5000mAh பேட்டரி, IP54.. இந்த TECNO 5ஜி போனை வாங்க சூப்பர் சான்ஸ்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது..108எம்பி ப்ரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, ஐபி54 ரேட்டிங் உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்ட டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.2000 நேரடி தள்ளுபடி (அல்லது விலை குறைப்பை) அறிவித்துள்ளது. என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

டெக்னோ போவா 6 நியோ 5ஜி (Tecno Pova 6 Neo 5G) ஸ்மார்ட்போனின் அசல் விலை மற்றும் ஆபர் விலை: அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.13,999 ஆக இருந்தது. தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.2000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.2000 விலை குறைப்பு.. இந்த TECNO 5ஜி போனை வாங்க சூப்பர் சான்ஸ்!

இந்த டிஸ்கவுண்ட் அசூர் ஸ்கை (Azure Sky), மிட்நைட் ஷேடோ (Midnight Shadow) மற்றும் அரோரா கிளவுட் (Aurora cloud) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் இன்னும் பெட்டர் ஆன டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி கருத்தில் கொள்ளலாம்.

டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 x 720 பிக்சல்ஸ்
- ஆக்டோ கோர் மீடியாடெக் டைனம்சிட்டி 6300 6என்எம்சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 108எம்பி பிரைமரி கேமரா + AI லென்ஸ்
- 8எம்பி செல்பீ கேமரா

- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- ஐபி54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட்
- ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைஓஎஸ் 14.5 ஓஎஸ்
- சைட் மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்

டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஹைஓஎஸ் 14 (HiOS 140 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஐபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 12ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ கடன் வாங்கி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 24ஜிபி ஆக விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போனான இதன் பேக் பேனலில் 210 எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பும் உள்ளது.

இதன் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பை, உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள், ஸ்மார்ட்போனின் பவர் ஸ்டேட்டஸ், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் கேட்கும் ம்யூசிக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 70W சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி , இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும், 50 நிமிடங்களில் 100 சதவிகிதத்திற்கும் பேட்டரியை நிரப்பும். மேலும் இந்த்ஸ் மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரத்திற்கும் மேலான கேமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 31 மணி நேரத்திற்கும் அதிகமான காலிங் நேரத்தை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 2000 Discount on Tecno Pova 6 Neo 5G Phone in Flipkart Check Out Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X