முழுசா ரூ.10000 தள்ளுபடி.. அனல் பறக்கும் விற்பனை.. ஐக்யூ குவெஸ்ட் டேஸ் சேல்.. ஐக்யூ நியோ 7 ப்ரோ எவ்வளவு?
அமேசான் தளத்தில் ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் ஐக்யூ குவெஸ்ட் டேஸ் சேல் (iQOO Quest Days Sale) ஜூலை 24ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் ஐக்யூ நிறுவனத்தின் பிளாக்ஷிப் போன்களுக்கு ரூ.10,000 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது.
அந்த வகையில், ஐக்யூ 11 (iQOO 11), ஐக்யூ 9 ப்ரோ (iQOO 9 Pro) ஆகிய போன்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி பெற முடியும். இருப்பினும், இந்த விற்பனையில், அனைவரது கவனத்தையும் பெற்றிருப்பது, ஐக்யூ நியோ 7 ப்ரோ போன் மட்டுமே.
ஏனென்றால், இந்த போன் 12 ஜிபி ரேம், பிரத்யேக கேமிங் சிப்செட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு போன்ற பட்டாசான அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த போனுக்கான தள்ளுபடி மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ஐக்யூ நியோ 7 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 7 Pro Specifications): இந்த ஐக்யூ போன் 6.78 ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.
இதுவொரு கேமிங் போன் என்பதால், அதற்காக பிரத்யேக கேமிங் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த போன் டார்க் ஸ்டோர்ம் பிளாக் (Dark Storm Black) மற்றும் ஃபியர்லெஸ் ஃபிளேம் ஆரஞ்ச் (Fearless Flame Orange) ஆகிய கலர்களில் வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.34,999க்கும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.37,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையில், எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








