Home
Mobile

எழுதி வச்சுக்கோங்க ரூ.30,000 போனை தூக்கி சாப்பிடும்: சூப்பர்வூக் சார்ஜிங் உடன் பட்ஜெட் விலையில் Oppo A78 5G!

ஒப்போ நிறுவனம் Oppo A78 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி 18 முதல் இதன் விற்பனைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் டூயல் கேமரா, 33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன்

ஏ-சீரிஸ் வரிசையில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ஸ்லைட் நாட்ச் டிஸ்ப்ளே வசதி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

33W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

33W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

Oppo A78 5G ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் 50 எம்பி டூயல் கேமரா அமைப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 மணிநேரம் ப்ளேபேக் நேரத்தைக் கொண்டிருக்கிறது.

Oppo A78 5G விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo A78 5G விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒளிரும் பிளாக் மற்றும் ஒளிரும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Oppo இன் இ-ஸ்டோர், அமேசான் மற்றும் பிற முக்கிய சில்லறை தளங்களில் ஜனவரி 18 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

சலுகையுடன் Oppo A78 5G வாங்கலாம்

சலுகையுடன் Oppo A78 5G வாங்கலாம்

Oppo A78 5G ஸ்மார்ட்போனை அமேசானில் எஸ்பிஐ கார்டுகள் பயன்படுத்தி வாங்கும் போது 10 சதவீத தள்ளுபடி அதாவது ரூ.1300 வரை தள்ளுபடியை பெறலாம். நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், பரிமாற்ற சலுகை என ஏணைய சலுகை விருப்பங்கள் வழங்கப்படுகிறது.

Oppo A78 5G சிறப்பம்சங்கள்

Oppo A78 5G சிறப்பம்சங்கள்

Oppo A78 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 13 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.56 இன்ச் HD+ (720x1,1612 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 269ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 89.8 பாடி டூ ரேஷியோ விகிதத்தைக் கொண்டிருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி, 8 ஜிபி ரேம் என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

டூயல் ரியர் கேமரா அமைப்பு

டூயல் ரியர் கேமரா அமைப்பு

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. இதில் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இதில் Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-சி போர்ட், GPS மற்றும் ஓடிஜி என பல இணைப்பு விருப்பங்கள் உள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

Oppo A78 5G ஸ்மார்ட்போனானது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 60 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 23 மணிநேரம் வரை ப்ளேபேக் நேரம் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 18,000 phone to beat Rs 30,000 phone: Oppo A78 5G smartphone Launched with SuperVOOC charging, 50MP Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X