Home
Mobile

இதை கேட்டா.. Google கம்பெனியே ஷாக் ஆகுமேப்பா.. இந்த Pixel போன் மீது ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. Flipkart அதிரடி!

கூகுள் (Google) நிறுவனமானது பிக்சல் 9 சீரிஸ் (Pixel 9 Series), பிக்சல் ஃபோல்ட் 2 (Pixel Fold 2) என பல புதிய தயாரிப்புகளில் பணிபுரிந்து வருகிறது. இவைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில், அனேகமாக 2024 அக்டோபரில் நடக்கும் வன்பொருள் நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தின் "தற்போதைய" பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 8 (Pixel 8) மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான விலை குறைப்பு கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக அணுக கிடைக்கிறது.

கூகுளின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் அதன் வெளியீட்டு விலையான ரூ.75,999 க்கு பதிலாக ரூ.63,999 க்கு விற்கப்படுகிறது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.12,000 குறைத்துள்ளது. இது தவிர, பிக்சல் 8 மாடல் மீது ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு சலுகையும் கிடைக்கிறது.

இந்த Pixel போன் மீது ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. Flipkart அதிரடி!

குறிப்பிட்ட பேங்க் காரட்டை வைத்திருக்கும் நுகர்வோர் ரூ.8,000 கூடுதல் தள்ளுபடியை பெற முடியும். இது திறம்பட பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.55,999 ஆக குறைக்கும். உண்மையிலேயே இது பிக்சல் 8 ஸ்மார்ட்போன் மீது முன்னெப்போதும் கிடைக்காத ஆபர் ஆகும்.

இதுதவிர்த்து தங்கள் பழைய போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய திட்டமிடுபவர்கள் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆபர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன்கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மீது ரூ.54,000 வரை தள்ளுபடி பெறலாம். எவ்வாறாயினும் இந்த பிளாட்ஃபார்ம் ஒருபோதும் நுகர்வோருக்கு முழு எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை வழங்காது. மாறாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலை மற்றும் சில நிபந்தனையின் அடிப்படையில் தான் எக்ஸ்சேன்ஜ் தொகை கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பிக்சல் 9 சீரீஸ் அறிமுகம் செய்யப்பட நிலையில் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக வாங்கலாம். அதற்கான 5 காரணங்களை எங்களால் சொல்ல முடியும். முதல் காரணம் - பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான ஹாரிசாண்டல் கேமரா யூனிட், க்ளீன் ஆன பேனல் என இது மிகவும் நேர்த்தியான, இலகுரக வடிவமைப்பையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பையும், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையம் கொண்டுள்ளது.

இரண்டாவது காரணம் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், அனைத்து பக்கங்களிலும் குறைந்தபட்ச பெஸல்கள், பிரகாசமான சூரிய ஒளியில் கூட நல்ல ப்ரைட்னஸை வழங்கும் 6.2 இன்ச் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

மூன்றாவது காரணம் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது கூகுளின் டென்சர் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. தினசரி பயன்பாடு, கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் என எதிலுமே குறை வைக்காத பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. இதன் பேட்டரி வயர்லெஸ் சார்ஜிங் கூடவே 27W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது சுமார் 1.5 மணி நேரத்தில் பிக்சல் 8-ஐ முழுமையாக சார்ஜ் செய்கிறது.

நான்காவது காரணம் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது விதிவிலக்கான கேமரா குவாலிட்டியை வழங்குகிறது. இது 50எம்பி மெயின் கேமராவானது பல்வேறு ஒளி நிலைகளில் சிறந்த அவுட்புட்களை வழங்குகிறது.இதன் புதிய மேக்ரோ ஃபோகஸ் அம்சம் நெருக்கமான புகைப்படங்களை இன்னும் எளிதாக்குகிறது.

ஐந்தாவது காரணம் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஒரு முழுமையான ஆண்ட்ராய்டு போன் ஆகும். ஒட்டுமொத்தமாக, பிக்சல் 8 ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த விலை வரம்பில் வாங்க கிடைக்கும் சிறந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு போன் ஆகும். அட்டகாசமான கேமரா, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு அனுபவம் என, சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 12000 Discount on Google Pixel 8 in Flipkart Check New Offer Price and Other Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X