Home
Mobile

திரும்ப கிடைக்காத ஆஃபர்.. கொத்தா ரூ.10,000 தள்ளுபடி.. 12GB ரேம்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

கேமராவுக்கு புகழ்பெற்ற விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro) போனுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, 120W சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்ட இந்த போன் குறித்த முழு விவரங்கள் இதோ.

விவோ எக்ஸ்90 ப்ரோ அம்சங்கள் (Vivo X90 Pro Specifications): இந்த போன் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு போய் கியூ9 (BOE Q9) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.10000 தள்ளுபடி! 12GB ரேம்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 2160Hz அல்ட்ரா-ஹை ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (Ultra High Frequency PWM Dimming), டிசிஐ - பி3 (DCI-P3) கலர் காமட் (Color Gamut) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 9200 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, இம்மார்டலிஸ் ஜி715 (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்989 (Sony IMX989) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்663 ( Sony IMX663) சென்சாருடன் கூடிய 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஐஎம்எக்ஸ்758 2எக்ஸ் (IMX758 2X) சென்சாருடன் கூடிய 50 எம்பி போர்ட்ராய்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ஃபிராரெட் சென்சார் வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,870mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டைப் - சி ஆடியோ போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் - சி 3.2 ஜென் 1 போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ள.

இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.84,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.10,000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

இதை பெற வேண்டுமானால், நீங்கள் ஐசிஐசி (ICICI) மற்றும் கோடக் மஹேந்திரா (Kotak Mahindra) வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். அதே போல ஒன்கார்டின் (OneCard) கிரெடிட் கார்டு இஎம்ஐ மூலம் இந்த விவோ போனை வாங்கினாலும் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ (SBI) வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.8,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் கேஸிஃபை ஆப் (Cashify App) மூலம் ரூ.8,000 வரையில் எஸ்க்சேஞ்ச் போனஸ் பெற முடியும். இந்த தள்ளுபடி மற்றும் ஆஃபர்கள் நாடு முழுவதும் உள்ள மெயின்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஸ்டோர்களுக்கு சென்று மேற்கூரிய கார்டுகளை பயன்படுத்தி தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 10000 Discount on Vivo X90 Pro in Until August 16 Check Specifications, Price, Offers, Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X