Home
Mobile

அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

By Super
அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

மொபைல் உலகில் கலக்கி கொண்டிருக்கிறது மோட்டோரோலா நிறுவனம். எக்ஸ்டி-615 என்ற புதிய மொபைலை தற்போது வெளியிட்டு இருக்கிறது மோட்டோரோலா.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் இந்த மொபைல் டார்க் கிரே மற்றும் சில்வர் நிற பேனல்களுடன் அழகான தோற்றத்தை கொண்டுள்ளது. எக்ஸ்டி 615 மொபைலை கையாள்வதற்கு எளிமையாக இருக்கும்.

கையில் சிரமத்தினை குறைக்கும் வகையில் 123.6 கிராம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா மொபைல்களிலும் அதன் பெயர் மொபைலின் மேல் புறத்தில் தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த மோட்டோ எக்ஸ்டி-615 மொபைலின் கீழே இதன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 4 இஞ்ச் அகன்ற திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 854 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்க முடியும். சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைலில் அப்ளிகேஷன்களை இயக்குவதும் எளிமையாக இருக்கும்.

இந்த மொபைலை பற்றி சொல்ல வேண்டிய முக்கியமான விஷயமே ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான். இது ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இரண்டு கேமராவினை கொடுத்து அசத்துகிறது இந்த எக்ஸ்டி-615 ஸ்மார்ட்மொபைல்.

இதில் ஒரு கேமரா 8 மெகா பிக்ஸல் துல்லியத்தை கொண்டிருக்கிறது. மற்றொன்று வீடியோ காலிங் வசதியை தரும் விஜிஏ கேமரா. இதனால் நிச்சயம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோவினையும் பெறலாம்.

இதில் கியூவல்காம் எம்எஸ்எம் 7227 ஏ-0 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இதில் இன்டர்னல் மெமரி 1ஜிபி வரை உள்ளது. இதன் மூலம் நிறைய தகவல்களை சேகரித்து கொள்ளலாம்.

இது புளூடூத் 3.0 வெர்ஷனை கொண்டுள்ளதால் பைல்களை பரிமாறிக்கொள்வது மிக எளிதாக இருக்கும். இதன் வைபை மூலம் வயர்லெஸ் இன்டர்நெட் வசதியை பெற முடியும்.

இந்த லேட்டஸ்டு ஸ்மார்ட்போன் 1,390 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 300 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 110 மணி நேரம் ஸ்டான்-பை டைமை கொடுக்கும். சர்வதேச சந்தையில் இந்த மோட்டோரோலா எக்ஸ்டி-615 மொபைலின் விலை ரூ.20,000 இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X