Home
Mobile

ப்ளாக்பெரியின் புதிய ஆடம்பர மொபைல்போன்!

By Karthikeyan
ப்ளாக்பெரியின் புதிய ஆடம்பர மொபைல்போன்!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக மொபைல் சந்தையில் ப்ளாக்பெரியை தயாரிக்கும் ரிம் நிறுவனம் பலவகையில் தத்தளித்து வருகிறது. குறிப்பாக ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாது திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிம், ப்ளாக்பெரி போர்ச்சே என்ற ஒரு புதிய மொபைலை இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் களமிறக்கிறது. ப்ளாக்பெரி போர்ச்டே பி9981 என்று அழைக்கப்படும் இந்த மொபைல் ரூ.1,39,990க்கு விற்கப்படுகிறது.

மிகவும் ஆடம்பரமாக இருக்கும் இந்த மொபைல் மெகா சக்தியையும், நவீன ஸ்டைலையும் கொண்டிருக்கிறது என்று ரிம் இந்தியாவின் தலைமை இயக்குநர் திரு. சுனில் தத் கூறுகிறார்.

அதோடு இந்த மொபைல் வாடிக்கையாளர்களின் எல்லா வைகையான தேவைகளையும் நிறைவு செய்யும் விதத்தில் இருக்கும் என்று கூறுகிறார். கடந்த மார்ச் மாதம் வரையில் இந்திய மொபைல் சந்தையில் ப்ளாக்பெரி 15 சதவீத பங்கை வைத்திருந்தது. இது கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது நோக்கியா மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் ப்ளாக் பெரி 3வது இடத்தில் இருக்கிறது என்று சைபர் மீடியா ரிசர்ச் டேட்டா கூறுகிறது.

அந்த வகையில் ரிம்மின் ப்ளாக்பெரி போர்ச்சே பி9981 ஸ்டெய்ன்லஸ் இரும்பில் தயாரிக்கப்பட்ட பேனலைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் க்யுவெர்ட்டி கீபோர்ட், மற்றும் க்ரிஸ்டல் க்ளியர் தொடு திரை ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போன் ஒரு தனியான பின் கொண்டிருக்கிறது. அதன் மூலம் இந்த மொபைல யார் பயன்படுத்துகிறார்கள் என்று மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் இந்த மொபைலில் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், லிக்கியுட் க்ராபிக்ஸ் தொழில் நுட்பம், எச்டி வீடியோ பதிவு, 24 பிட் உயர் ரிசலூசன் க்ராபிக்ஸ், அதி நவீன சென்சார்கள். என்எப்சியை சப்போர்ட் செய்யும் வசதி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 40 ஜிபி வரை மெமரியை அதிகரிக்கும் வசதி கொண்ட 8ஜிபி ஆன் போர்டு மெமரி ஆகிய நவீன உயர் வசதிகளை இந்த மொபைல் கொண்டிருக்கிறது.

உயர்ந்த விலையில் இந்த மொபைல் வருவதால் இந்தியாவில் குறிப்பிட்ட ப்ளாக்பெரி ப்ரீமியம் மற்றும் ப்ளாக்பெரி எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X