தீவாளியை முன்னிட்டு சூப்பரான அப்ளிகேசன்களை களமிறக்கும் ரிம்

By Karthikeyan
|
தீவாளியை முன்னிட்டு சூப்பரான அப்ளிகேசன்களை களமிறக்கும் ரிம்

தீவாளி திருவிழாவை முன்னிட்டு ரிம் நிறுவனம் தனது ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்களுக்காக பல புதிய அப்ளிகேசன்களை களமிறக்குகிறது. இந்த அப்ளிகேசன்களை திருவிழா சலுகை என்ற பெயரில் ப்ளாக் பெரி அப் வேர்ல்டுன் கீழ் வழங்குகிறது. இந்த அப்ளிகேசன்களை ரூ.2000க்குள் பெற முடியும். மேலும் இந்த சலுகை குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டுமே இருக்கும்.

அந்த வகையில் ப்ளாக்பெரிக்கான ரேடியா அப்ளிகேசனை ரூ.111க்கு வழங்குகிறது ரிம். இந்த அப்ளிகேசன் மூலம் 55, 000க்கும் அதிகமான ரேடியோ ஸ்டேசன்களிலிருந்து பாடல்களைக் கேட்கலாம்.

ப்ளாக்பெரிக்கான போட்டோ ஸ்டூடியோ என்ற அப்ளிகேசன் ரூ.148க்கு விற்கப்படுகிறு. இந்த அப்ளிகேசன் மூலம் இமேஜ் ப்ராசஸிங் செய்ய முடியும்.

ரூம் எஸ்கேப் என்ற ஒரு கேமிங் அப்ளிகேசனை ரூ.37க்கு விற்பனை செய்கிறது ரிம். இந்த கேம் திருடன் போலீஸ் விளையாட்டு போல இருக்கும்.

அடுத்ததாக பாப்அப் டிஸ்ப்ளே யுவர் மெசேஜஸ் என்ற அப்ளிகேசனை ரூ.111க்கு வழங்குகிறது ரிம். இந்த அப்ளிகேசன் வருகின் எஸ்எம்எஸ்களை வரிசைப்படுத்தி அறிவிக்கும்.

மேலும் பாலிவுட் சினிமா தீம், பாலிவுட்டுக்கு சமர்ப்பனம் தீம், கடவுள் கணேசா தீம், சாய்பாபா தீம் என்று பல தீம் அப்ளிகேசன்களையும் ரிம் வழங்குகிறது.

அடுத்ததாக பென்சில் கேமரா என்ற ஒரு புதிய அப்ளிகேசனை ரூ.37க்கு வழங்குகிறது ரிம். இந்த அப்ளிகேசன் மூலம் போட்டோக்களை பெண்சில் மற்றும் ஸ்கெட்சுகளால் வரைந்ததுபோல் மாற்ற முடியும்.

ப்ளாக்பெரி மொபைல்களுக்காக ஸ்லைடர் லாக் என்ற அப்ளிகேசனை ரிம் ரூ.74க்கு வழங்குகிறது. இந்த அப்ளகேசன் மூலம் ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்களை ஸ்லைடர் லாக் செய்ய முடியும்.

அதுபோல் ரிம் ஜிக்சா என்ற ஒரு பழைய கேமின் அப்ளிகேசனையும் வழங்குகிறது. இந்த அப்ளிகேசன் ரூ.74க்கு விற்கப்படுகிறது. அதோடு செய்ல்ட் என்று குரல் அறியும் அப்ளிகேசனை ரூ.185க்கு களமிறக்குகிறது ரிம்.

சாப்க்ளாக் என்ற அப்ளிகேசன் ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்களை ஸ்லைட்லாக் செய்ய உதவும். இந்த அப்ளிகேசனை ரூ.74க்கு விற்பனை செய்கிறது ரிம். மேலும் ப்ளாக்பெரி மெசஞ்சர் என்ற ஒரு புதிய அப்ளிகேசனையும் ரிம் களமிறக்குகிறது.

அதுபோல் பிரபலமான ப்ரூட் நிஞ்சா என்ற கேமை ஒத்த ப்ரூட் ஸ்லாஷ் என்ற ஒரு புதிய கேமையும் ரிம் ரூ.37க்கு வழங்குகிறது. மேலும் ஐடியூன்ஸ் சின்க் என்ற ஒரு புதிய அப்ளிகேசனையும் ரூ.148க்கு வழங்குகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்களில் ஐடியூன்களை சினஅக் செய்ய முடியும்.

கட்டபுல்ட் என்ற கேம் அப்ளிகேசனை ரூ.37க்கு வழங்குகிறது ரிம். அது அப்ளாக் என்ற அப்ளிகேசன் மூலம் ப்ளாக்பெரி ஸ்மார்ட்களைப் பாதுகாப்பாக பராமரிக்க முடியும். இந்த அப்ளிகேசன் ரூ.148க்கு விற்கப்படுகிறது. இறுதியாக லென்ஸ்பூஸ்ட் என்ற அப்ளிகேசனை ரூ.74க்கு வழங்குகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் போட்டோக்களை பில்டர் செய்ய முடியும்.

மேற்சொன்ன எல்லா அப்ளிகேசன்களையும் ரூ.2000க்குள் வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X