டிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா?

|

புதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999-ன்படி, ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணம் உள்ளிட்டவைகளை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.

நிலுவையில் இருந்த தொகை

நிலுவையில் இருந்த தொகை

பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 24 ம் தேதி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி, வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார், ரூ.16 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு, பி.எஸ்.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, எம்.டி.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியும் பாக்கி வைத்திருக்கிறது.

பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!

பெரும் நஷ்டத்தில் வோடபோன், ஏர்டெல்

பெரும் நஷ்டத்தில் வோடபோன், ஏர்டெல்

வோடபோன், ஐடியா, ஏர்டெல் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம் ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கட்டணத்தை உயர்த்த முடிவு:

கட்டணத்தை உயர்த்த முடிவு:

இதையடுத்து நஷ்டத்தை சமாளிக்கும் விதமாக வோடபோன், ஐடியா, ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்தது. மேலும் டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜியோவும் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்தது.

சலுகைகளை அறிவித்த மத்திய அரசு

சலுகைகளை அறிவித்த மத்திய அரசு

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வசூலிக்கும் திட்டத்தை தற்போது தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க விரும்பும் நிறுவனங்கள் வங்கி மூலமான உத்திரவாதத்தை சமர்பிக்க வேண்டும் எனவும் இந்த நிலுவை தொகையை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒப்புதல் அளித்தார்.

கட்டணம் உயர்த்தப்படுமா:

கட்டணம் உயர்த்தப்படுமா:

இந்த அறிவிப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது. எனவே கட்டணங்கள் உயர்த்தபடாது என்ற நம்பிக்கை அனைவரிடமும் நிகழ்ந்தது. ஆனால் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் கட்டணம் உயர்த்த வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் கட்டணம் குறைவாக இருக்கும்போது நீண்ட நாட்கள் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

அரசு ஆதரவுடன் இந்தியர்களின் விவரங்கள் திருட்டு: கூகுள் அதிர்ச்சி தகவல்அரசு ஆதரவுடன் இந்தியர்களின் விவரங்கள் திருட்டு: கூகுள் அதிர்ச்சி தகவல்

வோடபோன் ரீசார்ஜ்:

வோடபோன் ரீசார்ஜ்:

கட்டணம் குறைவாக இருக்கும்போது நீண்ட நாட்கள் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். ரூ.509, ரீசார்ஜ் செய்தால், 1.5ஜிபி டேட்டா தினமும், அன்லிமிட்டெட் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் வோடபோன் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் 100 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ.1699-க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாள் வேலிடிட்டி தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி உண்டு. அதேபோல் ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தாலும் 365 நாள் வேலிடிட்டி உண்டு, அன்லிமிட்டட் கால், 12 ஜிபி இன்டெர்நெட், 3600 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது.

 ஏர்டெல் ரீசார்ஜ்:

ஏர்டெல் ரீசார்ஜ்:

ரூ .1,699 திட்டம் 1 ஜிபி தினசரி இன்டர்நெட், 365 நாட்கள் செல்லுபடியாகும். ரூ. 597 திட்டம் 6 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்படும். மேலும் ரூ .998 விலை, 12 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது.

ஜியோ:

ஜியோ:

ரூ.448 ரீசார்ஜ் செய்து 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி. ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 60 ஜிபி டேட்டா கிடைக்கும் 90 நாட்கள் வேலிடிட்டி. ரூ.1999-க்கு ரீசார்ஜ் செய்து 125 ஜிபி டேட்டா வசதி பெறலாம், இந்த திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி. அதேபோல் ரூ.4999-க்கு ரீசார்ஜ் செய்து 350 ஜிபி டேட்டாவை 360 நாட்கள் வேலிடிட்டியுடன் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Prepaid Plans Price Hike: Should You Upgrade To A Long-Term Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X