Home
Mobile

பட்ஜெட் விலையில் தலைசிறந்த சிறப்பம்சங்களுடன் OPPO A12 அறிமுகம்! கண்டிப்பாக வாங்க தோணும் விலை!

உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில், OPPO நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை எப்போதும் தனது வாடிக்கையாளர்களுடன் நிர்வகித்து நிலைத்து நிற்கிறது. ஓப்போ நிறுவனம் அதன் முன்னோடி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்துறை முன்னணி அம்சங்களுடன் நுகர்வோரின் நம்பிக்கையை உலகளவில் பெற்றுள்ளது, வெவ்வேறு விலை அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கு தனது சாதனத்தை வழங்கி சமர்ட்போன் சந்தையில் முன்னேறி வருகிறது.

புதிய OPPO A12 ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய OPPO A12 ஸ்மார்ட்போன் அறிமுகம்

OPPO நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய OPPO A12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. சமீபத்திய ஸ்மார்ட்போன் பல மிரட்டலான அம்சங்களின் கலவையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு, AI அம்சத்துடன் கூடிய டூயல் கேமரா சேவை, அட்டகாசமான டிசைன் மற்றும் நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று தனது பட்டியலில் அனைத்தையும் சிறந்த அம்சங்களாக தேர்வு செய்து OPPO A12 ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம்.

OPPO A12 ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் விபரம்

OPPO A12 ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் விபரம்

OPPO A12 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டாகவும் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்களை டூயல் சிம் இணைப்புடன் , கூடுதல் ஸ்டோரேஜ் எஸ்.டி கார்டு ஸ்லாட் கொண்ட ட்ரிபிள் கார்டு ஸ்லாட் உடன் வருகிறது.

கூடுதல் ஸ்டோரேஜாக 256GB வரை முடியும். இதனால் பயனர்கள் பல படங்கள், வீடியோக்கள், கேம்ஸ்கள் மற்றும் பிற மல்டிமீடியா ஃபைல்களை தடையின்றி சேமிக்கலாம். கூடுதல் ஸ்டோரேஜ் OPPO A12 கேமிங் அனுபவத்தை தடையின்றி அனுபவிக்க வழிவகுக்கிறது. இந்த விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் இதுவாகும்.

முழு நாளும் நீடிக்கும் பேட்டரி மற்றும் பிராசஸர் விபரம்

முழு நாளும் நீடிக்கும் பேட்டரி மற்றும் பிராசஸர் விபரம்

OPPO A12 ஸ்மார்ட்போன், மிகப் பெரிய 4,230 mAh பேட்டரியுடன் வருகிறது. நீங்கள் ஹார்ட்கோர் பயனராக இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் நீடிக்கும். இது தொடர்ச்சியான 8 மணிநேர வீடியோ பிளேபேக், உயர்திறன் கொண்ட கேம்ஸ்கள், பல மணிநேர சமூக வலைதள பயன்பாடு என அனைத்திற்கும் நீடித்து நிலைத்து நிற்கும் பேட்டரியை கொண்டுள்ளது.

சார்ஜரைத் தேடாமல் பல மணிநேரம் உங்கள் பயன்பாட்டை நீங்கள் தொடரலாம். OPPO A12, மீடியாடெக் P35 ஆக்டா-கோர் செயலியால் இயக்கப்படுகிறது. சிப்செட் பயனர் அனுபவத்தை பெருக்கி, செயல்திறனை மற்றொரு நிலைக்கு எடுத்துச் செல்கிறது. இது பின்னடைவு இல்லாத கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

நம்பிக்கையான பாதுகாப்பு

நம்பிக்கையான பாதுகாப்பு

OPPO எப்போதும் பயனர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளது, மேலும் OPPO A12 மற்றொரு எடுத்துக்காட்டு. புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் மூலம், OPPO தனது நுகர்வோருக்கு பாதுகாப்பின் அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளது. பயனர்கள் சாதனத்தைத் திறக்க பின்புற பேனலில் வைக்கப்பட்டுள்ள கைரேகை சென்சாருடன் ஸ்மார்ட்போன் வருகிறது. அதெல்லாம் இல்லை, அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக OPPO A12 ஆனது AI Face Unlock உடன் பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் AI இயக்கப்பட்ட டூயல் கேமரா

பட்ஜெட் விலையில் AI இயக்கப்பட்ட டூயல் கேமரா

பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா அம்சத்துடன் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு OPPO A12 ஒரு வரப்பிரசாதம். டி.எஸ்.எல்.ஆர் கேமரா படம் போல தோற்றமளிக்க OPPO A12 சாதனத்தில் AI இயக்கப்பட்ட சக்திவாய்ந்த 13MP பிரதான கேமரா மற்றும் 2MP மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கொண்ட கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. உயர் தெளிவுத்திறன் கொண்ட செல்ஃபீ படங்களை பதிவு செய்ய 5MP கொண்ட AI செல்ஃபீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. உங்கள் வயதிற்கு ஏற்றார் போல AI படம்பிடிக்கிறது.

சுவாரஸ்யமான வடிவமைப்பு ஸ்டைல்

சுவாரஸ்யமான வடிவமைப்பு ஸ்டைல்

OPPO A12 சுவாரஸ்யமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பட்ஜெட் விலை பிரிவில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போனும் இதற்கு ஈடாக முடியாது. மெல்லிய ஸ்லிம் வடிவமைப்புடன் ஒரு கை பயன்பாட்டிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுளள்து. இது 8.3 மிமீ தடிமன் கொண்ட மெல்லிய வளைந்த பாடியுடன் வருகிறது மற்றும் வெறும் 165 கிராம் எடையுடன் வருகிறது. இந்த சாதனம் 6.22' இன்ச் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேயுடன், கண் பாதுகாப்பு பில்டருடன் வருகிறது. பின்புறம் 3D டயமண்ட் பிளேஸ் கிரேடியன்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. OPPO A12 ப்ளூ மற்றும் பிளாக் வண்ண வகைகளில் கிடைக்கிறது.

கட்டாயம் வாங்க தூண்டும் விலை மற்றும் விற்பனை

OPPO A12 சாதனத்தின் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட் ரூ. 9,990 என்ற விலையிலும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 11,490 என்ற விலையிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் 2020 ஜூன் 10ம் தேதி முதல் கிடைக்கிறது. சாதனம் 2 நட்சத்திர நினைவக சேர்க்கைகளில் கிடைக்கும். சிறப்பு சலுகையாக ஜூன் 21ம் தேதிக்குள் OPPO A12 சாதனத்தை வாங்கினால் 6 மாத கால நீட்டிப்பு உத்தரவாதத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம். அதேபோல், ஆஃப்லைன் கடைகளிலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விற்பனை சிறப்பு சலுகை

சிறப்பு விற்பனை சிறப்பு சலுகை

பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஈ.எம்.ஐ உடன் 5 சதவீத கேஷ்பேக் நன்மையுடன் 6 மாதங்கள் வரை வட்டி இல்ல நோ காஸ்ட் இ.எம்.ஐ.விருப்பமும் கிடைக்கிறது. அதேபோல், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹோம் கிரெடிட், எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய வாடிக்கையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான ஈஎம்ஐ விருப்பங்கள் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு OPPO A12
தலைசிறந்த ஸ்மார்ட்போனாகும்.

OPPO A12 சிறப்பம்சங்கள்

Weight 165g
Thickness 8.3mm
Size 15.59 x 7.55 x 0.83 cm
Display 6.22-inch Waterdrop notch
Resolution 720 x 1520 (TFT-LCD)
Aspect ratio 19:9
Color Black and Blue
Screen-to-Body Ratio 89%
Dual Rear Camera 13 MP Main Camera + 2 MP Depth Camera
Front Camera 5MP
Battery 4230 mAh
OS ColorOS 6.1.2 based on Android 9
Processor MTK Octa-core processor P35
Connectivity WLAN 802.11a/b/g/n/ac
WLAN 2.4G, WLAN 5.1G, WLAN 5.8G, WLAN Display
Bluetooth 5.0
Others 3D back cover, Rear fingerprint scanner, Face Unlock
Best Mobiles in India

English summary
Riding High On Performance, OPPO Takes The Game Of Innovation A Notch Higher With OPPO A12 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X