அசத்தும் ஒன்ப்ளஸ் 6; அறிமுக நாளிலேயே கேஷ்பேக் ஆபர்; அமேசான் அதிரடி.!
ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கான கவுண்டவுன் இறுதியாக தொடங்கியது.
ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கான கவுண்டவுன் இறுதியாக தொடங்கியது. மே 16 ஆம் தேதி லண்டனில் ஒன்ப்ளஸ் 6 அறிமுகப்படுத்தப்பட்டு, மே 17 அன்று மும்பையில் அதன் இந்திய வெளியீட்டை தொடங்குகிறது. ஒன்ப்ளஸ்நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்க்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பார்த்து, அதன் அடுத்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6 மீதான ஃபாஸ்ட் ஏஎப் விற்பனையை அறிவித்துள்ளது.
இந்த புதிய ஃபாஸ்ட் ஏஎப் விற்பனையானது அமேசான் இந்தியாவுடன் ஆன ஒரு பிரத்யேக கூட்டணியில் நடக்கிறது. ஆர்வமுள்ள பயனர்கள், ஒன்ப்ளஸ் 6-ஐ மட்டுமின்றி சில கூடுதல் நன்மைகளையும் இந்த வாய்ப்பின் கீழ் பெறலாம். விருப்பமுள்ள பயனர்கள், ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய அறிமுகத்தின் போதே, அதாவது வெளியான முதல் நாளிலேயே, ரிசர்வ் செய்ய கிடைக்கும். நேற்று முதல் தொடங்கப்பட்ட இந்த 'ஃபாஸ்ட் AF' விற்பனையானது மே 16, 2018 வரை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.2000/- மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.!
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் Amazon.in வலைத்தளத்தில். ரூ.1000/- மதிப்பிலான ஒரு இ-கிப்ட் கார்டை வாங்க வேண்டும். அதை மே 21 மற்றும் மே 22-ல் அமேசான் தளத்தில், ஒன்ப்ளஸ் 6-ஐ வாங்கும் போது பயன்படுத்தலாம். இந்த ரூ.1000/- மதிப்பிலான நன்மைகளுடன் சேர்த்து, ஒன்ப்ளஸ் 6-ஐ வாங்கு, போது ரூ.1000/- கேஷ்பேக்கும் கிடைக்கும். ஆகமொத்தம் இந்த வாய்ப்பின் கீழ் ஒரு பயனருக்கு ஒன்ப்ளஸ் 6 உடன் சேர்த்து ரூ.2000/- மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.

கூடுதலாக 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் உத்தரவாதம்.!
கூறப்படும் அமேசானின் இ-கிப்ட் கார்ட் ஆனது உங்களை ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை, முதல் நாளில் வாங்க தகுதியான அமேசான் ப்ரைம் மெம்பர்களுடன் சேர்த்துக்கொள்ள உதவும். இந்த முதல் விற்பனை மே 21 அன்று நடக்கும். ஒன்ப்ளஸ் 6-ஐ உடனடியாக வாங்கும், இந்த பொன்னான வாய்ப்புடன் சேர்த்து அமேசான் பயனர்களுக்கு ஒன்ப்ளஸ் 6 மீதான ஒரு சிறப்பு சலுகையும் கிடைக்கும்.அதாவது, ஒன்ப்ளஸ் 6 மீது ஏற்கனவே இருக்கும் 1 ஆண்டு உத்தரவாதத்தின் மேல் கூடுதலாக 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் உத்தரவாதத்தை அமேசான் வழங்குகிறது. இது ஒட்டுமொத்த திட்டமும் ஒன்ப்ளஸ் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

முதல் நாளிலேயே வாங்க வேண்டும்.!
இந்த பாஸ்ட் ஏஎப் விற்பனையின் முழு முதல் நோக்கமுமே, அனைத்து பயனர்களும் ஒன்ப்ளஸ் 6-ஐ அறிமுகம் ஆகும் முதல் நாளிலேயே வாங்க வேண்டும் என்பதும், அதனை ஆர்டர் செய்யும் திறனை கொண்டிருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக, ஒன்ப்ளஸ் 6 ஆனது 2018 ஆம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் என்பதால், இந்த வாய்ப்பானது மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஒரு 256ஜிபி சேமிப்பு மாறுபாடு.!
வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும், ஒன்ப்ளஸ் 6 ஆனது, பயனர்களுக்கு ஒரு உறுதியான அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனை உறுதிப்படுத்தும் வண்ணம், ஒன்ப்ளஸ் 6 ஆனது ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஒரு 256ஜிபி சேமிப்பு மாறுபாடு ஆகியவைகளை கொண்டு வெளியாகிறது. மேலும் வெளியாகும் புதிய ஒன்ப்ளஸ் 6 ஆனது, ஹை எண்ட் இரட்டை லென்ஸ் கேமராவை கொண்டு அறிமுகமாகவுள்ளது. மேலும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சமீபத்திய OxygenOS உடனான ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக ஒன்ப்ளஸ் 6 ஆனது நீர்-தூசி எதிர்ப்பு வடிவமைப்பு கொண்டு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடன் ஒரு பெரிய பெஸல்லேஸ் டிஸ்பிளே, எஃப்எச்டி+ டிஸ்பிளே, அனைத்து கண்ணாடி வடிவமைப்பு, மற்றும் ஒரு பெரிய பேட்டரி அலகு ஆகியவைகளும் கொண்டிருக்கும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ ஒன்ப்ளஸ் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: www.oneplus.in


Click it and Unblock the Notifications