முன்பை விட மிகவும் குறைவு : விலை குறைப்பில் குதித்த ரிலையன்ஸ்!
ரிலையன்ஸ் நிறுவனம் லைஃப் பிரான்டு கருவிகளின் விலையை அதிரடியாய் குறைத்திருக்கின்றது. அதன் படி லைஃப் ஃபிளேம் 1, விண்ட் 5 மற்றும் வாட்டர் 7 உள்ளிட்ட மாடல்களின் விலையைக் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. விலை குறைக்கப்பட்டு லைஃப் ஃபிளேம் 1, விண்ட் 5 மற்றும் வாட்டர் 7 கருவிகளின் விலை முறையே ரூ.4,399, ரூ.5,599 மற்றும் ரூ.9,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
விலை குறைக்கப்பட்ட கருவிகளில் கிடைக்கும் முக்கிய அம்சங்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

லைஃப் ஃபிளேம் 1
லைஃப் ஃபிளேம் 1 கருவியில் FWVGA திரை மற்றும் 854*480 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் மற்றும் அட்ரினோ 304 GPU கொண்டிருக்கின்றது.

லைஃப் ஃபிளேம் 1 மெமரி
மெமரியை பொருத்த வரை 1 ஜிபி ரேம், 8 ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதோடு 5 எம்பி பிரைமரி மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

லைஃப் ஃபிளேம் 1 கனெக்டிவிட்டி
லைஃப் ஃபிளேம் 1 கருவியானது ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் மற்றும் 4ஜி எல்டிஇ / 3ஜி HSPA+, வை-பை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

லைஃப் விண்ட் 5
லைஃப் விண்ட் 5 கருவியில் 5 இன்ச் எச்டி 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட திரை மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6735P குவாட்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

லைஃப் விண்ட் 5 மெமரி
1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 8 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

லைஃப் விண்ட் 5 இயங்குதளம்
லைஃப் விண்ட் 5 கருவியும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

லைஃப் வாட்டர் 8
லைஃப் வாட்டர் 8 கருவியில் 5 இன்ச் AMOLED எச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

லைஃப் வாட்டர் 8 மெமரி
லைஃப் வாட்டர் 8 கருவியில் 3ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

லைஃப் வாட்டர் 8 இயங்குதளம்
லைஃப் வாட்டர் 8 கருவியானது ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் மற்றும் 2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications