Home
Mobile

ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய விலைகுறைப்புகள் அறிவிப்பு.!

அதிகபட்ச விலைகுறைப்புகளுக்கு லைஃப் வாட்டர் 1, லைஃப் வாட்டர் 11 மற்றும் லைஃப் எப்1 ஸ்மார்ட்போன்கள் உட்படுத்தப்பட்டுள்ளது.

By Muthuraj

ஜூலை 21-ஆம் தேதி நிகழும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில், ஜியோ நிறுவனத்திடம் இருந்து ஜியோ 4ஜி வோல்ட் மொபைல் அறிமுகம் மற்றும் ஜியோ தொலைத்தொடர்பு கட்டண விலை குறைப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பழைய ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைஃப் ஸ்மார்ட்போன்களின் விலைகளை 60% குறைக்கப்பட்டுள்ளதை நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய விலைகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதிகபட்ச விலைகுறைப்புகளுக்கு லைஃப் வாட்டர் 1, லைஃப் வாட்டர் 11 மற்றும் லைஃப் எப்1 ஸ்மார்ட்போன்கள் உட்படுத்தப்பட்டுள்ளது.

லைஃப் வாட்டர் 1

லைஃப் வாட்டர் 1

ரூ.17,399/-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட லைஃப் வாட்டர் 1 ஸ்மார்ட்போன் இப்போது ரூ.6,989/- என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 615 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

போட்டி

போட்டி

13எம்பி முதன்மை கேமரா மற்றும் 5எம்பி இரண்டாம் நிலை கேமராவை கொண்டுள்ள இக்கருவி விலை குறைப்புக்குப் பிறகு, சியோமி ரெட்மீ 4, இன்போகஸ் டர்போ 5 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ இ4 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை அளிக்கிறது.

லைஃப் எப்1

லைஃப் எப்1

கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட லைஃப் எப்1 ஆனது 42% விலைக்குறைப்பை பெற்றுள்ளது, இயக்கருவி இப்போது ரூ.9,499/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 4, யூ யுரேகா பிளாக் மற்றும் நோக்கியா 3 ஆகியவற்றிற்கு எதிராக போட்டியிடும் என்று நம்பலாம்.

ஸ்னாப்ட்ராகன் 617 செயலி

ஸ்னாப்ட்ராகன் 617 செயலி

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்ஸல்) தீர்மானம் உடனான கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளே கொண்டுவருகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க விருப்பத்துடன் கூடிய 3 ஜிபி ரேம், அட்ரீனோ 405 ஜிபியூ மற்றும் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு ஆக்டா -கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 617 செயலி மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தமட்டில் 8எம்பி செல்பீ மற்றும் பிடிஏஎப், எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுடனான ஒரு 16எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது.

லைஃப் வாட்டர் 10

லைஃப் வாட்டர் 10

ரிலையன்ஸ் லைஃப் வாட்டர் 10 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000/- விலைக்குறைப்பை பெற்றுள்ளது. தற்போது ரூ.6,999/-க்கு கிடைக்கும் இந்த சாதனம் சியோமி ரெட்மீ 4, இன்போகஸ் டர்போ 5 மற்றும் அதன் சொந்த உடன்பிறப்பான லைஃப் வாட்டர் 1 ஆகிய ஸ்மார்ட்போனிற்கு கடும் போட்டியை அளிக்கும்.

13எம்பி பின்புற கேமரா

13எம்பி பின்புற கேமரா

இந்த ஸ்மார்ட்போன் ஒரு தோல் போன்ற பேனல் அமைப்பை கொண்டுள்ளது. சைகைகள் கட்டுப்பாடுகள் மற்றும் திருட்டு எதிர்ப்பு கண்காணிப்பு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. 3ஜிபி ரேம் உடன் இணைந்த 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில், இரட்டை டோன் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13எம்பி பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான 5எம்பி கேமரா கொண்டுள்ளது.

மற்ற லைஃப் சாதனங்களும் விலை குறைப்பு

மற்ற லைஃப் சாதனங்களும் விலை குறைப்பு

மேற்கூறிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து மற்ற லைஃப் சாதனங்களும் விலை குறைப்பை பெற்றுள்ளன. அவைகளில் - லைஃப் வாட்டர் 11, லைஃப் வாட்டர் 7எஸ், லைஃப் எர்த் 1 மற்றும் லைஃப் விண்ட் 4எஸ் ஆகியவைகள் குறிப்பிடத்தக்க கருவிகளாகும். அவைகள் விலைகுறைப்பிற்கு பின்னர் முறையே ரூ.7,249, ரூ. 7,649, ரூ 19,131 மற்றும் ரூ. 6,549/- என்ற விளைநிர்ணயங்களை பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Reliance Lyf smartphones get massive price cut. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X