ரூ.4,999/-க்கு லைஃப் சி451 அறிமுகம், என்னென்ன அம்சங்கள்.?

1ஜிபி ரேம் மற்றும் அட்ரெனோ 304 ஜிபியூ உடனான ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷல்லோவ் இயக்க முறைமையில் இயங்குகிறது.

|

லைஃப் சி451 என பெயரிடப்பட்ட ஒரு புதிய லைஃப் ஸ்மார்ட்போன், லைஃப் லைத்தளத்தில் ரூ.4,999/-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கனெக்ட் தொடர் ஸ்மார்ட்போன்களில் பட்டியலிடப்பட்டுள்ள லைஃப் சி451 சாதகமானது வெள்ளை நிறத்தில் வருகிறது மற்றும் இப்போது வாங்குவதற்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் இது கிடைக்கிறது.

ரூ.4,999/-க்கு லைஃப் சி451 அறிமுகம், என்னென்ன அம்சங்கள்.?

லைஃப் சி451 சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில் 4.5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (480 x 854 பிக்சல்கள்) 218 ​​பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 2டி அசஹி கண்ணாடி பாதுகாப்புடன் கொண்ட டிஸ்பிளேவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1ஜிபி ரேம்

1ஜிபி ரேம்

உடன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 210 எம்எஸ்எம்8909 செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் அட்ரெனோ 304 ஜிபியூ உடனான ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷல்லோவ் இயக்க முறைமையில் இயங்குகிறது.

2,800 எம்ஏஎச்

2,800 எம்ஏஎச்

8ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கும் இந்த தொலைபேசி ஒரு 2,800 எம்ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி கோடனுள்ளது. இது 12.5 மணி நேர பேச்சு நேரம், 240 மணி நேர காத்திருப்பு நேரம் மற்றும் 4ஜி நெட்வொர்க்கின் கீழ் 6 மணி நேர வீடியோ பின்னணி மற்றும் 45 மணி நேரம் வரை ஆடியோ பிளேபேக் வழங்குமென நிறுவனம் தெரிவிக்கிறது.

டச் போகஸ், ஸ்மைல் டிடெக்ஷன்

டச் போகஸ், ஸ்மைல் டிடெக்ஷன்

கேமரா துறையை பொறுத்தமட்டில் 5 மெகாபிக்சல் எல்இடி ப்ளாஷ் உடனான ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. கேமரா அம்சங்களில் முகம் கண்டறிதல், மல்டி ஷாட், பனோரமா, ஜியோ டேக்கிங், டச் போகஸ், ஸ்மைல் டிடெக்ஷன் ஆகியவைகளை கொண்டுள்ளது.

டூயல் சிம், 4ஜி / எல்டிஇ வோல்ட்

டூயல் சிம், 4ஜி / எல்டிஇ வோல்ட்

அளவீட்டில் 139 x 66.5 x 9.8 மிமீ மற்றும் 165 கிராம் எடையுடைய இந்த லைஃப் சி451 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம், 4ஜி / எல்டிஇ வோல்ட், வைஃபை, புளுடூத் 4.1, ஜிபிஎஸ், மைக்ரோ யூஸ்பி 2.0 ஆகிய வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோஷன் & சைகை

மோஷன் & சைகை

மேலும் அக்ஸலரேமீட்டர், ஆம்பியண்ட் லைட், ப்ராக்ஸிமிட்டி போன்ற உணரிகளுடன் பிலிப் டூ ம்யூட், டாப் டூ வேக், மேல்பக்கம் ஸ்லைட் செய்ய அன்லாக் மற்றும் கீழ்பக்கம் ஸ்லைட் செய்ய கேமரா போன்ற மோஷன் & சைகை போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance LYF C451 4G VoLTE smartphone launched at Rs 4,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X