அம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த "அடேங்கப்பா" பிளான்.!
கடந்த மாதம், ஜியோபோன் பயனர்களுக்கான பேஸ்புக் பயன்பாடு அறிவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜியோபோனில்
4ஜி-செயல்படுத்தப்பட்ட பீச்சர் போன் ஆன ரிலையன்ஸ் ஜியோபோனில் மிக விரைவில் வாட்ஸ்ஆப் ஆதரவு இடம்பெறும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் இந்தியா நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் பங்களிப்பில் பெரிய பின்னடைவு ஏற்படுமென்பது வெளிப்படை.
வாட்ஸ்ஆப் ஆதரவிற்கு இணக்கமில்லாத காய் ஓஎஸ் (Kai OS) கொண்டு இயங்கும் ஜியோபோன், அறிமுகமான நாள் முதலே வாட்ஸ்ஆப் ஆதரவு சார்ந்த பேச்சுவார்த்தைகளை சந்தித்து வருகிறது. அதன் அடிப்படையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் உடனான பேச்சுவார்த்தையின் கீழ், ஜியோபோனிற்கான ஒரு தனி வாட்ஸ்ஆப் பயன்பாட்டை உருவாக்கும் முயற்சி நடக்குமென்று ஊகிக்கப்பட்டது. அது மிக விரைவில் உண்மையாகும் என்பதுபோல் தெரிகிறது.

காய்ஓஎஸ் இயங்குதளத்திற்கான ஒரு பயன்பாடு.!
வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் பீட்டா தளத்தில் காணப்படும் மாற்றங்களை கண்காணிக்கும் ட்வீட்டர் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின்படி (WaBetaInfo - @wabetainfo), வாட்ஸ்ஆப் நிறுவனமானது காய்ஓஎஸ் (KaiOS) இயங்குதளத்திற்கான ஒரு பயன்பாட்டை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதன் பொருள் ஜியோபோனில் விரைவில் வாட்ஸஸ்ஆப் ஆதரவு கிடைக்கும்.

ஒரு புதிய தளத்தின் இருப்பைக் குறிக்கிறது.!
வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ அதன் உத்தியோகபூர்வ வலைப்பதிவு இடுகையொன்றில், "காய் ஓஎஸ் (KaiOS) இயங்குதளம் சார்ந்த மேம்பாடுகள், விண்டோஸ் போன் 2.18.38 கருவிகளின் சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டது, இது வாட்ஸ்ஆப் சேவையகங்களுடன் இணைக்கப்படக்கூடிய ஒரு புதிய தளத்தின் இருப்பைக் குறிக்கிறது." என்று எழுதியுள்ளது.

காய்ஓஎஸ் இயங்குதளத்தில் களமிறங்கும் பட்சத்தில்.!
தற்போது வரையிலாக, வாட்ஸ்ஆப் பயன்பாடானது ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 பில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது. மேலும் காய்ஓஎஸ் இயங்குதளத்தில் களமிறங்கும் பட்சத்தில், கூடுதலாக சுமார் 6 மில்லியன் பயனாளர்களை சேர்க்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் பயனர்களுக்கான பேஸ்புக் பயன்பாடு.!
கடந்த மாதம், ஜியோபோன் பயனர்களுக்கான பேஸ்புக் பயன்பாடு அறிவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜியோபோனில் உள்ள பேஸ்புக் பயன்பாடானது, புஷ் நோட்டிபிகேஷன்ஸ், வீடியோ மற்றும் வெளிப்புற உள்ளடக்கங்களுக்கான இணைப்புகள் ஆகியவற்றை ஆதரிக்கிறது. கூடுதலாக, ஜியோபோனில் உள்ள பேஸ்புக் பயன்பாடானது 'கர்சர்' (cursor) செயல்பாடுக்கு உகந்ததாகவும் உள்ளது.

28ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு ஆதரவு.!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான ஜியோபோனின் அம்சங்களை பொருத்தமட்டில், 2.4 இன்ச் க்யூவிஜிஏ டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் டூயல்-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி காய்ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த 4ஜி பீச்சர் போன் ஆனது 512எம்பி அளவிலான ரேம் மற்றும் 4ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன், 128ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.


இணைப்பு ஆதரவுகள்.!
ஜியோபோன் ஆனது 4ஜி வோல்ட் நெட்வொர்க்கில் இயங்குவதால், ஜியோடிவி, ஜியோமியூசிக் மற்றும் ஜியோசினிமா போன்ற முன் நிறுவப்பட்ட பயன்பாடுகளையும் கொண்டிருக்கும். மேலும் இந்த சாதனம் 24 இந்திய மொழிகளுக்கான ஆதரவும், வாய்ஸ் கமென்ட்ஸ் ஆதரவையும் தன்னுள் கொண்டுருக்கும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், ஹெட்ஜாக், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி ற்றும் ப்ளூடூத் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications