ரூ.153, ரூ.54 மற்றும் ரூ.24/-க்கு புதிய பேக்ஸ் மற்றும் ரூ.0/-க்கு ஜியோ போன்.!

|

இந்திய வாடிக்கையாளர்களுக்கு - முகேஷ் அம்பானி தலைமையிலான - ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் சமீபத்திய ஜியோபோன் தொலைபேசியை இன்று அறிமுகம் செய்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் முன் பதிவிற்கு திறந்து விடப்படும் இந்த சாதனத்தை ரூ.1,500/- என்ற செக்யூரிட்டி டெபாஸிட் கொடுத்துபெற்றுக்கொள்ளலாம். அந்த டெபாஸிட் தொகையானது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும்.

இந்த சாதனம், ஆகஸ்ட் 24-ஆம் தேதி, மைஜியோ பயன்பாட்டிலும் மற்றும் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் முன்பதிவு செய்வதற்கு கிடைக்கும். அறிமுகத்தின் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் ஆன முகேஷ் அம்பானி "ஒவ்வொரு வாரமும் 5 மில்லியனுக்கும் அதிகமான ஜியோபோன்கள் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

மாதம் ரூ.153/- பேக்

மாதம் ரூ.153/- பேக்

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ தன் தாணா தன் ஆபரின் கீழ் மாதம் ரூ.153/- பேக்கின் கீழ் வழக்கமான இலவச குரல் அழைப்புகள், வரம்பற்ற தரவு மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை நிறுவனம் வழங்கும்.

ரூ.309/- டிவி பேக்

ரூ.309/- டிவி பேக்

டிவி -கேபிள் மூலம் பயனர்கள் தங்கள் சாதனத்தை டி.வி.-யுடன் இணைக்க முடியும் ((ஸ்மார்ட் டிவிகளை மட்டுமல்ல, சி.ஆர்.டி. தொலைக்காட்சிகளையும் இணைக்க மட்டும்). இந்த டிவி பேக்கை அணுக மாதத்திற்கு ரூ.309/- என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.24/- மற்றும் ரூ.54/- பேக்

ரூ.24/- மற்றும் ரூ.54/- பேக்

மேலும், இரண்டு பேக்குகள் கிடைக்கப்பெறுகின்றன. ரூ.153/- என்ற மாதாந்திர பேக்கின் கீழ் கிடைக்கும் சலுகைகளை 2 நாட்களுக்கு அனுபவிக்க ரூ.24/- பேக் உதவும் மற்றும் ஒரு வார காலம் அனுபவிக்க ரூ.54/- பேக் உதவும்.

வாய்ஸ் அசிஸ்டென்ட்

வாய்ஸ் அசிஸ்டென்ட்

ஜியோபோன் (JioPhone) வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் வருகிறது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிதாக பீச்சர் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம், அழைப்புகள் செய்யலாம், இணைய உலாவுதல் மற்றும் இசை மற்றும் பலவற்றைக் கேட்கலாம்.

ஜியோ பயன்பாடுகள்

ஜியோ பயன்பாடுகள்

குரல் கட்டளையை வழங்குவதற்காக இக்கருவி ஹிந்தி மொழியையும் ஆதரிக்கிறது. ஜியோ மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ பயன்பாடுகள் சாதனத்துடன் இணைந்தே வருகிறது. ஒரு எண்ணெழுத்து கீபேட் உடன் வரும் இந்த சாதனம் மைக்ரோபோன் ஸ்பீக்கர், 4-வழி நேவிகேஷன் மற்றும் ஒரு வசதியான வடிவமைப்பு ஆகியவற்றுடன் வருகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இந்த சாதனம் ஒரு 2.4-அங்குல க்யூவிஜிஏ (QVGA) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் எஸ்டி அட்டை ஆதரவும் கொண்டுள்ளது. மேலும் ஒரு எப்எம் ரேடியோ, டார்ச்லைட், ரிங்டோன்கள், தொலைபேசி கான்டாக்ட்ஸ், கல் ஹிஸ்டரி மற்றும் பல பீச்சர் போன்களுக்கே உரிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance JioPhone launched in India for Rs Zero. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X