ஜியோபோனில் வந்தது யூடியூப் செயலி : கெத்து காட்டிய அம்பானி.!
ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது.
முகேஷ் அம்பானி அவர்கள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார் என்று தான் கூறவேண்டும், அதன்படி குறைந்த விலையில் ஜியோபோன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார் அம்பானி, அதில் வாட்ஸ்ஆப,
பேஸ்புக். போனற் பல்வேறு சேவை கொண்டுவந்தார், பின்பு இப்போது ஒரு புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளார்.

தற்சமயம் ஜியோ நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால், ஜியோபோன் 1 மற்றும் ஜியோபோன் 2 மாடல்களை பயன்படுத்துவோர் இனி யூடியூப் செயலியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் செயலி
குறிப்பாக கைஒ.எஸ்-க்கான பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த மிக அருமையா இருக்கும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் ஜயோபோன்களில் வாட்ஸ்ஆப் வசதி வந்தது, இந்நிலையில் யூடியூப் செயலி வந்தது மிகவும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஜியோபோன் 2 சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே :
ஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








