4ஜி ஜியோபோன் 3: ஸ்மார்ட்போன் மாடலா அல்ல பியூச்சர் போன் மாடலா?
ஜியோ டெலிகாம் சந்தை மற்றும் செல்லுலார் சந்தையில் தனக்கென்று தனி முன்னணி இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக ஜியோ நிறுவனம் திகழ்கிறது.

ஜியோ நிறுவனம் சென்ற ஆண்டு ஜியோ போன் 2 மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மேம்பட்ட மாடலான ஜியோபோன் 3 சாதனத்தை இந்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பியூச்சர் போன் சந்தையில் கால் பதித்த ஜியோ
ஜியோ நிறுவனத்தின் LYF ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் ஜியோ நிறுவனம் குறைந்த விலை மற்றும் குறைந்த ஸ்பெக்ட்ரம் போன்கள் தயாரிக்கும் பியூச்சர் போன் சந்தை பக்கம் கவனம் செலுத்தியது. அதில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றியும் பெற்றுள்ளது.

4ஜி சேவையுடன் ஜியோபோன்
பியூச்சர் போன் பிரிவுகளில் தான் ஜியோ நிறுவனம் ஜியோபோன் 1 மற்றும் ஜியோபோன் 2 என்ற இரண்டு பியூச்சர் போன் மாடல்களை குறைந்த விலையில் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து 4ஜி சேவையுடன் ஜியோபோன் 3 சாதனம், ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ தெரிவித்திருந்தது.

ஜியோபோன் 3 ஸ்மார்ட்போன் மாடலா?
ஜியோ நிறுவனம், தைவானிய சிப்மேக்கர் நிறுவனமான மீடியாடெக் நிறுவனத்துடன் இனைந்து ஜியோபோன் 3 தயாரிப்பில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. மீடியாடேக் பிராசஸருடன் ஜியோபோன் 3, ஸ்மார்ட்போன் மாடலாக வெளியிடும் என்ற தகவலில் தற்பொழுது மாற்றம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி பியூச்சர் போனாக ஜியோபோன் 3
ஜியோவின் 4ஜி 'ஸ்மார்ட்போன்' திட்டம், தற்பொழுது ஜியோ 4ஜி 'பியூச்சர்' போனாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீடியாடேக் பிராசஸருடன் ஜியோபோன் 3 'பியூச்சர்' போன் மாடலாக வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் 3 மாடல் விலை
ஜியோபோன் 2 சாதனம் போலவே, இந்த ஜியோபோன் 3 மாடலில் வாட்ஸ் ஆப், யூடியூப், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற கூடுதல் சேவைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜியோபோன் 3 மாடல், இந்தியாவில் வெறும் ரூ.4500 என்ற விற்பனை விலையில் விற்பனைக்குக் கருப்பு நிறத்தில் அறிமுகம் முகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications