ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?

|

வரும் ஜூலை 15-ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தனது 43-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ஜியோ நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஜியோபோன் ஆனா மாடலான ஜியோபோன் 3 அறிமுகம் செய்யப்பட
வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ போன் 2

இதற்குமுன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாடல்கள் ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 முந்தைய ஆண்டுகளில் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏஜிஎம்களில் தான் அறிவிக்கப்பட்டன. எனவே இந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏஜிஎம்-இல் ஜியோ
போன் 3 அறிமுகம் ஆகலாம் என்கிற எதிர்பார்ப்பு அதிகளவு உருவாகியுள்ளது.

 ஜூலை 21, 2017 அன்று ந

முதன்முறையாக ஜூலை 21, 2017 அன்று நடந்த 40-வது ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ரூ.0 என்ற பயனுள்ள விலையின் கீழ் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார். மேலும் இதை வாங்குபவர்கள் முதலில் ரூ.1,500 செலுத்த வேண்டி இருந்தது என்பது இங்கே
குறிப்பிடத்தக்கது.

ஜியோபோன் 2

அடுத்து ஜியோபோன் 2 சாதனம் ஆனது 2018-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற நிறுவனத்தின் 41-வது ஏஜிஎம்மில் வெளியிடப்பட்டது, குறிப்பாக ஜியோ போன் 2 ஆனது 2999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!பில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!

அறிமுக தேதிகளை வைத்து

எனவே கடந்த கால அறிமுக தேதிகளை வைத்து பார்க்கும் போது, இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ போனின் மூன்றாம் பதிப்பை நாளை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை ஜியோபோன் 3 மாடலின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை நிர்ணயம்
குறித்து இதுவரை எந்த விவரங்களும் கிடைக்கவில்லை..

 எங்களிடம் எதிரபார்க்கப்படும்

இருந்தபோதிலும் எங்களிடம் எதிரபார்க்கப்படும் சில தகவல்கள் உள்ளன, அதனபடி ஜயோபோன் 3 மாடல் ஆனது ஆண்ட்ராய்டு வி 8.1 (ஒரியோ) இயக்க முறைமையின் கீழ் இயங்கலாம் மற்றும் இந்த போன் க்வாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மூலம் இயக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

 மீடியாடெக் சிப்செட்

மேலும் மீடியாடெக் சிப்செட் மூலம் இயங்கும் ஜியோபோன் 3 மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஜியோபோன் 3 வெளிவரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி 6ஐ இன்று அறிமுகம்: இதோ சிறப்பம்சங்கள்!பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி 6ஐ இன்று அறிமுகம்: இதோ சிறப்பம்சங்கள்!

ஜியோ போன் 3

ஜியோ போன் 3 மாடலில் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, வழங்கப்பட வாயப்பு உள்ளது. மேலும் 2800எம்ஏஎச் பேட்டரி மற்றும், வைஃபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், வோல்ட் மற்றும் பல அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாச சாதனம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1,998-க்கு அறிமுகம்

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஜியோ 3 மாடல் ஆனது ரூ.1,998-க்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்டின் மற்ற எல்லா நகழ்வுகளை போல் இல்லாமல்,நாளை நடக்கும் ஏஜிஎம் ஆனது நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஏஜிஎம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Phone 3 May Get Launch On July 15: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X