ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!

|

அப்புறம் என்னப்பா? 5ஜி சேவைக்காக ரூ.88,078 கோடி செலவழிச்சி.. 24,740MHz ஸ்பெக்ட்ரமை வாங்கியாச்சி.. அடுத்தது ஜியோ போன் 5ஜி (Jio Phone 5G) மாடலின் அறிமுகம் தானே? என்று பலரும் கேட்க தொடங்கி விட்டனர்.

உண்மைதான்.. Jio Phone Next க்கு அடுத்தது Jio Phone 5G தான்!

உண்மைதான்.. Jio Phone Next க்கு அடுத்தது Jio Phone 5G தான்!

(முன்குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் எல்லாமே ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலுடையது ஆகும்; ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் அல்ல)

நினைவூட்ட வேண்டாம் என்று நினைக்கிறோம். ஜியோ நிறுவனத்திடம் இருந்து கடைசியாக அறிமுகமான ஸ்மார்ட்போன் - ஜியோ போன் நெக்ஸ்ட் (Jio Phone Next) மாடல் ஆகும்.

கூகுள் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்ட ஜியோ போன் நெக்ஸ்ட்டின் அடுத்த 'வெர்ஷன்' அதாவது அடுத்த ஜியோ போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வருகிறது மற்றும் அது Jio Phone 5G என்று அழைக்கப்படலாம்.

நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதமே 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளதால் ஜியோ போன் 5ஜி மாடல் ஆனது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது போல் தெரிகிறது.

இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

"ரகசியத்தை" அம்பலப்படுத்திய Airtel அதிகாரி! அப்புறம் என்ன Jio ரீசார்ஜ் செஞ்சிடுங்க!

Jio Phone 5G எப்போது அறிமுகமாகும்?

Jio Phone 5G எப்போது அறிமுகமாகும்?

தற்போதைய நிலவரப்படி, ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், ஜியோபோன் 5ஜி ஆனது வருகிற செப்டம்பர் 2022 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் 5ஜி போனை வெளியிடுவதன் மூலம், ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற முயல்கிறது. அதாவது 4ஜி அறிமுகத்தின் கையாண்ட அதே உத்திகளை கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளது.

ஜியோ போன் 5ஜி-ஐ பயன்படுத்த கண்டிப்பாக Jio 5G SIM வாங்க வேண்டுமா?

ஜியோ போன் 5ஜி-ஐ பயன்படுத்த கண்டிப்பாக Jio 5G SIM வாங்க வேண்டுமா?

5ஜி சிம் கார்ட்டினை வாங்காமல் ஜியோ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியாது என்றாலும் கூட உங்களின் தற்போதைய ஜியோ 4ஜி சிம் கார்டு ஆனது, வரவிருக்கும் ஜியோ போன் 5ஜி மாடலிலும் "வேலை செய்யும்" என்பது போல் தான் தெரிகிறது.

இருப்பினும் இதுகுறித்தும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. Jio Phone 5G மாடலில் கட்டாயம் ஜியோ 5ஜி சிம் தேவை என்கிற தகவல் ஏதேனும் கிடைத்ததும், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்!

Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!

ஜியோ போன் 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ஜியோ போன் 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ஜியோ போன் 5ஜி மாடலின் அம்சங்கள், நேற்றும் இன்றும் அல்ல, கடந்த பல மாதங்களாகவே இணையத்தில் சுற்றி வருகின்றன.

இது Adreno 619 GPU உடனாக ஸ்னாப்டிராகன் 480 5G ப்ராசஸர் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 8nm ஃபேப்ரிகேஷன் ப்ராசஸ் அடிப்படையிலான Qualcomm நிறுவனத்தின் நுழைவு நிலை 5G சிப் ஆகும்.

இது ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 215 உடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மேம்பாடு ஆகும். மேலும் இந்த 5ஜி போன் ஆனது n3, n5, n28, n40 மற்றும் n78 ஆகிய ஐந்து 5G பேண்டுகளை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

டிஸ்பிளே, கேமரா - எப்படி இருக்கும்?

டிஸ்பிளே, கேமரா - எப்படி இருக்கும்?

ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வழியாக வெளியான அறிக்கையின்படி, ஜியோ போன் 5ஜி ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த 5ஜி போனில் 13MP மெயின் சென்சார் + 2MP மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கான 8MP கேமரா இருக்கலாம்.

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

பேட்டரி, ஸ்டோரேஜ் எல்லாம் எப்படி இருக்கும்?

பேட்டரி, ஸ்டோரேஜ் எல்லாம் எப்படி இருக்கும்?

Jio Phone 5G ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடைசியாக, இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். அதிர்ஷ்டவசமாக, இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இடம்பெறலாம்.

Jio போன் 5G மாடலின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

Jio போன் 5G மாடலின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

இந்தியாவில் ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

ஜியோ நிறுவனம் முடிந்தவரை இந்த ஸ்மார்ட்போனின் விலையை குறைக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். எப்படி பார்த்தாலும் இதன் விலை ரூ.10,000 க்குள் தான் இருக்கும் மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் Jio Phone 5G ஸ்மார்ட்போனிற்காகவே சில புதிய 5G திட்டங்களையும் அறிமுகம் செய்யும்!

Best Mobiles in India

English summary
Reliance Jio New 5G Smartphone Jio Phone 5G Launch Date Specifications Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X