Subscribe to Gizbot

இப்படியொரு பீச்சர் போன் வெளியானதே இல்லை : ஜியோ 4ஜி வோல்ட் போன் அம்சங்கள்.!

Written By:

மிகவும் சிறப்பான சலுகைகள் மூலம் இந்திய தொலைத் தொடர்பு சந்தையை ஆக்கிரமித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் இலவசங்கள் மற்றும் மிகவும் மலிவான விலை நிர்ணயம் ஆகிய விற்பனை புள்ளிகளால் தொடர்ந்து வாடிக்கையாளர் ஈர்த்துவரும் நிலைப்பாட்டில், ஜியோ அதன் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை மலிவான விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் ஆன்லைன் வட்டாரங்களை சுற்றி வந்தன.

அதை உறுதி செய்யும் வண்ணம் தற்போது அக்கருவி சார்ந்த புகைப்படங்களுடன் அதன் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் சார்ந்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. பலமுறை ஜியோ 4ஜி வோல்ட் போன் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் கூட அனைத்திலும் ஒரே மாதிரியான சாதனமே காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வேறுபட்டதாக இருப்பதாலேயே இதனை இறுதிநிலை கருவி என்று நம்பலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இரட்டை மொழி விசைப்பலகை

இரட்டை மொழி விசைப்பலகை

சாதனத்தின் தோற்றத்தை பொறுத்தமட்டில், இந்த புதிய ஜியோ 4ஜி வோல்ட்போன் ஆனது லைஃப் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட ஒரு கருவியாக இருப்பதை நீங்களே படத்தில் தெளிவாகக் காணலாம். கீழே உள்ள இரட்டை மொழி விசைப்பலகையில் ஆங்கில, மற்றும் ஹிந்தி மொழிகளை காணமுடிகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டில் இதுவொரு ஹிந்தி திணிப்பாக காண முடிகிறது.

கேமரா

கேமரா

டார்ச் லைட்டிற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பொத்தான் கொண்டுள்ள இந்த சாதனம் 2.4 அங்குல வண்ணத் திரை என்ற ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. பின்பக்கம் ஒரு 2-மெகாபிக்சல் கேமரா மேல் ஒரு கடினமான பூச்சு தென்படுகிறது.

128 ஜிபி வரை

128 ஜிபி வரை

வெளியாகியுள்ள தகவலிலிருந்து எதிர்நோக்கப்படும் ஜியோ 4ஜி வோல்ட் போன் ஆனது எந்த செயலி கொண்டு இயங்குமென்று உறுதியாக தெரியவில்லை என்றாலும் கூட 4ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் 512 எம்பி ரேம் உடன் வருகிறது என்பது உறுதி. 128 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்கும்.

இரட்டை சிம் சாதனம்

இரட்டை சிம் சாதனம்

4ஜி வோல்ட் தொலைபேசிகளுக்கான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 205 தளத்தை பயன்படுத்தும் என்று அறிவித்திருந்தாலும், இக்கருவி ஒரு ஸ்ப்ரெட்ட்ராம் செயலி கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கிறோம் (ஆனால், இது முற்றிலும் உறுதியான நம்பிக்கை இல்லை). மேலும் இக்கருவி நானோ சிம்கள் கொண்ட ஒரு இரட்டை சிம் சாதனம் ஆகும்.

ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட்

ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட்

வியக்கத்தகு வண்ணம் வீடியோ அழைப்பு, ஜிபிஎஸ், புளுடூத் 4.1 மற்றும் யோஎஸ்பி இணைப்பு ஆகியவற்றுக்கான ஆதரவை இந்த பீச்சர் போனில் பார்க்கமுடிகிறது. மேலும், இதர இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் உள்ளமைக்கப்பட்ட குரல் உதவியாளருடன் இது வெளிவருகிறது. இதன் ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆனது தற்போதைய வானிலை போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும், கணித சமன்பாடுகளையும் தீர்க்கும்.

ஜியோ உடன் மட்டுமே வேலை செய்யும்

ஜியோ உடன் மட்டுமே வேலை செய்யும்

இதன் இணைப்பு விருப்பங்களில் மூன்று எல்டிஇ பட்டைகளை மட்டுமே காண முடிகிறது, அதாவது - பேண்ட் 3, 5 மற்றும் 40. இதன்படி இக்கருவி 2ஜி மற்றும் 3ஜி பட்டைக்ளுக்கான ஆதரவை கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. ஆக இக்கருவி ரிலையன்ஸ் ஜியோ உடன் மட்டுமே வேலை செய்யும்.

விலை நிர்ணய புள்ளி

விலை நிர்ணய புள்ளி

ரூ.1,499/- என்ற விலை நிர்ணய புள்ளியில் எதிர்பார்க்கப்படும் இந்த ஜியோ 4ஜி வோல்ட் போன் ஆனது சந்தையில் இதர பீச்சர் போன்களை ஒரு கை பார்க்கபோகிறது என்பதில் சந்தேகமே வேண்டாம். அதுமட்டுமின்றி இந்த பீச்சர் போனுடன் ஜியோவிற்கே சொந்தமான சில அற்புதமான இலவசங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இக்கருவி சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Reliance Jio and Lyf’s 4G VoLTE Feature Phone. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot