கனவு இல்ல நிஜம்: ரூ.4000-த்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன்- அட்டகாச அம்சங்களோடு ஜியோ ஆர்பிக்!

|

ஜியோ நிறுவனம் புதிதாக மூன்று மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதுமாடல் ஸ்மார்ட்போன்கள்

புதுமாடல் ஸ்மார்ட்போன்கள்

ரிலையன்ஸ் ஜியோ இந்தாண்டு பிற்பகுதியில் புதுமாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ரூ.4000-த்துக்கும் குறைவான விலையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறைந்த விலை ஆர்பிக் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஆதரவில் இயங்கும்கூகுள் ப்ளே கன்சோலில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜியோ ஆர்பிக் ஸ்மார்ட்போன்

ஜியோ ஆர்பிக் ஸ்மார்ட்போன்

ஜியோ ஆர்பிக் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். வரவிருக்கும் ஜியோ ஆர்பிக் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸில் இயங்கும். சாதனத்தில் HD + காட்சி 720 × 1400 தீர்மானம் கொண்டதாக இருக்கலாம். ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் கியூஎம் 215 செயலி மூலம் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Android Go சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயலி இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஜியோ கூகிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

வேறு எந்த தகவலும் இல்லை

வேறு எந்த தகவலும் இல்லை

ஜியோ ஆர்பிக் ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்தும் அம்சங்கள் குறித்தும் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் ஜியோ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த முழு முடிவும் விரைவில் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 200 மில்லியன் சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ஸ்மார்ட்போன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ

மூன்று ஸ்மார்ட்போன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ரிலையன்ஸ் ஜியோ மூன்று சாதனங்களை சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் ஆர்பிக் மைரா, ஆர்பிக் மைரா 5 ஜி மற்றும் ஆர்பிக் மேஜிக் 5 ஜி என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் 5ஜி இணைப்பு இருக்கும் என்று தகவல்கள் உள்ளன. கூகிள் உடனான ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுபோன்ற அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(வீடியோ)நிஜத்தில் சூப்பர் ஹீரோ., உயிரை காப்பாற்றும் சோதனை- மலை உச்சியில் பறந்த சூப்பர் ஜெட்!(வீடியோ)நிஜத்தில் சூப்பர் ஹீரோ., உயிரை காப்பாற்றும் சோதனை- மலை உச்சியில் பறந்த சூப்பர் ஜெட்!

ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம்

ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம்

சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியர்கள் காத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் 2ஜி அம்ச தொலைபேசியை பயன்படுத்தும் 350 மில்லியன் இந்தியர்கள் மலிவு விலை ஸ்மார்ட்போனுக்கு இடம்பெயரும் நடவடிக்கையை நாம் துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்கள்

குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்கள்

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க இருக்கிறது என அம்பானி அறிவித்தார். தற்போதைய நிலையின்படி 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும்படியான வலிமை மிக்க ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள்

உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள்

இந்தியா சீனா இடையேயான எல்லை பதற்றத்துக்கு மத்தியில் சீன பொருட்களுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக பல்வேறு சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஜியோ இந்த உள்நாட்டு தயாரிப்பை மேற்கொள்ள இருக்கிறது. ஜியோ அறிமுகத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio May Planning to Launch Jio Orbic Smartphone Under Rs.4000?- Sources Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X