ஐபோன் எக்ஸ் மீது 70% பைபேக் ஆபர்; ஜியோ அதிரடி.! ஆனால் ஏகப்பட்ட விதிமுறைகள்.!

|

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் என்பது பெரும்பாலானோர்களின் பட்ஜெட்டுக்கு அப்பால் இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதை இந்திய நுகர்வோர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சாதகமான ஒரு கருவியாக மாற்றியமைக்கும் தனது முயற்சியையோ அறிவித்துள்ளது.

ஐபோன் எக்ஸ் மீது 70% பைபேக் ஆபர்; ஜியோ அதிரடி.! ஏகப்பட்ட விதிமுறைகள்.!

முகேஷ் அம்பானி தலைமையின்கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பை ஐபோன் பிரியர்களுக்கு வழங்குகிறது. அந்த வாய்ப்பின் கீழ் நீங்கள் ஒரு ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் மீது 70 சதவிகிதம்ரு பைபேக் (buyback offer) சலுகையை பெறலாம்.

முக்கியமான விதிமுறை.!

முக்கியமான விதிமுறை.!

அடிப்படையாகவே இந்த திட்டத்தின் கீழ், ஐபோன் எக்ஸ் சாதனத்தில் ஜியோ சிம் பயன்படுத்தும்டி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த குறைந்த விலையில் சாதனத்தை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதைவிட முக்கியமான விதிமுறை என்னவென்றால், ஒரு வருடம் கழித்து வாங்கிய கருவிகளை திரும்பத் தர வேண்டும்.

ரூ.1,999/-க்கு ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.!

ரூ.1,999/-க்கு ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.!

இந்த திட்டம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனம் மீது மட்டுமில்லாமல், ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய கருவிகள் மீதும் செல்லுபடியாகும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரிலையன்ஸ் ரீடெயில் லிமிடெட் ஸ்டோர், மைஜியோ அப்ளிகேஷன், ஜியோ.காம் அல்லது இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் ஆகியவற்றிலிருந்து ரூ.1,999/-க்கு ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.

இந்த சலுகையை பெறுவதெப்படி.?

இந்த சலுகையை பெறுவதெப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பைபேக் வாய்ப்பானது கடந்த செப்டம்பர் 29 முதல் துவங்கியது மற்றும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். முன்பதிவு செய்து பயனர்கள் ஐபோன் எக்ஸ்ஐ- வாங்கியவுடன், மொபைல் பயன்பாடான மைஜியோ ஆப்பை பதிவிறக்கம் செய்து ரெஜிஸ்டர் செய்வதின் மூலம் பைபேக் வாய்ப்பில் (என்ரோல்) இணையலாம். ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, திரும்பி அளிக்கப்படும் ஒரு ஐபோன் எக்ஸ் ஆனது "ஒரு முழு செயல்பாடு" அல்லது "உழைப்பு நிலை"யில் இருக்க வேண்டும்.

ரூ.799 அல்லது அதற்கு மேற்பட்ட ஜியோ ரீசார்ஜ் மட்டுமே.!

ரூ.799 அல்லது அதற்கு மேற்பட்ட ஜியோ ரீசார்ஜ் மட்டுமே.!

அதுமட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் படி, இந்த வாய்ப்பின் கீழ் ஐபோன் எக்ஸ் பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.799 அல்லது அதற்கு மேற்பட்ட ஜியோ ரீசார்ஜ்களை மட்டுமே நிகழ்த்த தகுதியுடையவர் ஆவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜியோ.காம் வலைத்தளத்தில் ஐபோன் எக்ஸ் முன்பதிவு

ஜியோ.காம் வலைத்தளத்தில் ஐபோன் எக்ஸ் முன்பதிவு

செய்வதெப்படி.?
- உத்தியோகபூர்வ ஜியோ.காம் வலைத்தளத்திற்கு வருகை தரவும்.
- பின்னர் உங்களுக்கு தேவையான ஐபோன் எக்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.!

தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.!

- பின்கோடு உள்ளிட்டு ஐபோனை பதிவு செய்யவும்.
- பின்னர் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
- விரும்பிய கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அவ்வழியே ரூ.1,999/- என்ற முன்பதிவு பணத்தை அளிக்கவும்.

குறிப்பிட்ட காலக்கெடு.?

குறிப்பிட்ட காலக்கெடு.?

சமீபத்திய நிலவரத்தின்படி, ​​ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. ஒரு நுகர்வோர் ஒரு ஐபோன் எக்ஸ் கருவி முன்பதிவை மட்டுமே செய்ய முடியும். மறுப்பக்கம், ஐபோன் எக்ஸ் சாதனத்தின் கிடைக்கும்தன்மை சார்ந்த அளவுகோல் மற்றும் விநியோகத்திற்கான குறிப்பிட்ட காலக்கெடுவைப் பற்றி எந்தவொரு விவரத்தையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio is offering 70 percent buyback on Apple iPhone X: How to avail this offer. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X