ஜியோ அதிரடி: குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200/- கேஷ்பேக்.!

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இப்போது ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது, ஜியோ ஃபுட்பால் ஆஃபர் என்ற பெயரில் பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.2200-வரை கேஷ்பேக் சலுகை வழங்ப்படுகிறது.

ஜியோ அதிரடி: குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200/- கேஷ்பேக்.!

பானசோனிக், ஸ்வைப், கோமியோ, செல்கான், சியோக்ஸ், சாம்சங், எல்.ஜி, நோக்கியா, மோட்டோரோலா, சியோமி, பிளாக்பெரி, அசுஸ், ஹூவாய், இன்டெக்ஸ், ஆல்காடெல், மைக்ரோமேக்ஸ், 10.ஆர், லைஃப், ஜிவி, சென், மற்றும் சென்ட்ரிக் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஜியோ கேஷ்பேக் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரீசார்ஜ்:

ரீசார்ஜ்:

இந்த சிறப்பு சலுகை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் வாங்குவதோடு ஜியோ எண்களுக்கு தொடர்ச்சியான ரீசார்ஜ் செய்வோருக்குகேஷ்பேக் வழங்ப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 மார்ச் 31:

மார்ச் 31:

குறிப்பாக ஜியோ 4ஜி சேவையை ஸ்மார்ட்போன்களில் ஆக்டிவேட் செய்ய வேண்டும், பின்பு வாடிக்கையாளர்கள் மார்ச் 31(2018)-ம் தேதிக்குள் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்கள் வடிவில் மைஜியோ செயலியில் கிரெடிட் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனை:

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனை:

ஜியோபைபர் சேவையானது இந்த காலாண்டின் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதை வெளியான எல்லா அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. ஜியோ ஏற்கனவே அதன் ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனையை 10 நகரங்களில் - மும்பை, டெல்லி என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிகழ்த்தி வருகிறது.

மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது

மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது

இன்றோ, நாளையோ கூட ஜியோபைபர் அறிமுகமானாலும் கூட, முதல் மூன்று ம்,மாதங்களுக்கான இலவச பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.அதை ஜியோவும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இன்னும் கூடுதல் சுவாரசியம் என்னவனில், அறிமுகத்திற்கு பின்னர் மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது

இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது

ஜியோபைபர் திட்டங்கள் கசிவது ஒன்றும் முதல் முறையல்ல, முன்னதாகவே கசிந்துள்ளன., ஆனால் இவைகளை இறுதி திட்டங்களாக கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சற்று கூடுதல் விலை நிர்ணயம் பெறலாம் அல்லது இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது

டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது

மிக நிச்சயாமாக தற்போது சந்தையில் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் சேவைகளை விட மிக குறைவான விலையில், அதிக அளவிலான தரவு விகிதங்கள் கொண்டிருக்கும். கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Football Offer Gives Rs 2200 Cashback on New Smartphones ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X