அம்பானியின் அடுத்த அறிவிப்பு "இதுவாக" இருக்கலாம்.!

ஜியோ செயல்பாடுகள் - முதலில் யாருக்குமே புரிய வராது, மெல்ல மெல்ல தான் வெளிப்படும்.

|

முகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டங்களுக்குள்ளும், அறிவுப்புகளுக்குள்ளும் என்ன என்ன வியாபார தந்திரங்கள் ஒளிந்திருக்கிறதென்பது - முதலில் யாருக்குமே புரிய வராது. அது மெல்ல மெல்ல தான் வெளிப்படும்.

முற்றிலும் இலவசமான ஒரு சேவையாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கட்டண சேவையாக உருமாறி, மலிவான விலையில் தொடங்கி - தற்போது என்ன விலை நிர்ணயம் செய்தாலும் அதை முகம் சுளிக்காமல் வாங்கும்படி பயனர்களாகிய நம்மை பழக்கி வைத்துள்ளது முகேஷ் அம்பானியின் வியாபார மூளை.!

அப்படியானதொரு மாஸ்டர் பிளானில் தான் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.!

இதற்கு காரணம் என்ன.?

இதற்கு காரணம் என்ன.?

ஒருபக்கம் ரிலையன்ஸ் ஜியோ தனது பிரபலமான ஜியோபோன் உற்பத்தியை நிறுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஜியோபோனின் வியாபாரம் நடக்கவில்லை என்பது தான் இதற்கு காரணமாக இருக்கலாமென நீங்கள் நினைத்தால் அது தவறு.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான  ஜியோ ஸ்மார்ட்போன்.!

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஜியோ ஸ்மார்ட்போன்.!

ஜியோபோன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள செய்தி வெளியான மறுகையில் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு ராயல்ட்டிக்கான பேச்சுவார்த்தை.!

ஆண்ட்ராய்டு ராயல்ட்டிக்கான பேச்சுவார்த்தை.!

ஃபேக்டர் டெய்லி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் ஒரு ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை பற்றிய பேச்சுவார்த்தைகளில் உள்ளது என்றும் அதனால் தன ஜியோபோன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை, ஆண்ட்ராய்டிற்கான ராயல்ட்டியை பெறுவதற்காக கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில்இ ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

ஏற்கனவே ஆண்ட்ராய்டின் பங்கு அதிகம்.!

ஏற்கனவே ஆண்ட்ராய்டின் பங்கு அதிகம்.!

ஜியோபோன் தற்போது கைஓஎஸ் (KaiOS) கொண்டு இயங்குகிறது. இது சந்தையில் பிரபலமான ஓஎஸ் அல்ல, இருப்பினும் கூட இதில் ஆண்ட்ராய்டின் பங்கு மிக அதிகமாக உள்ளது. "கைஓஎஸ் உடன் இணக்கமான பயன்பாடுகள் அதிகம் இல்லை. ஆனாலும் கூட ஜியோபோனிற்கான சிறப்பு பதிப்பை உருவாக்குவது சார்ந்த பணிகள் நடைபெற்றுத்தான் வருகின்றன" என நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட சாதனம்.!

மேம்பட்ட சாதனம்.!

இருப்பினும், நிறுவனம் தனது 4ஜி பீச்சர் போன்களை ஓரங்கட்டி விட்டு, புதிய ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போனைக் கொண்டுவருமா.? அல்லது மேம்பட்ட சாதனம் சார்ந்த பணிகளில் ஈடுபடுமா.? என்பது சார்ந்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் இல்லை. மேலும், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விலை நிர்ணயம் மற்றும் கிடைக்கும்தன்மை பற்றியும் எந்த குறிப்பும் இல்லை.

ஏர்டெல், வோடபோன், மற்றும் ஐடியா - கடுமையாக பாதிக்கும்.!

ஏர்டெல், வோடபோன், மற்றும் ஐடியா - கடுமையாக பாதிக்கும்.!

ஜியோவின் இந்த நடவடிக்கை நிஜமானால், இது நிச்சயாமாக ஏர்டெல், வோடபோன், மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்.ஏர்டெல் சமீபத்தில் கார்போன் உடன் இனியானது ஒரு புதிய ஸ்மார்ட்போனை ரூ.1,399/-க்கு அறிமுகப்படுத்தியது. மறுகையில் பாரத் 2 அல்ட்ரா எனும் புதிய 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை வோடபோன் - மைக்ரோமேக்ஸ் கூட்டணி அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio eyes Android-based smartphone to take on Airtel, Vodafone: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X