ரூ.1,740/- மற்றும் ரூ.1,800/-க்கு 2 மாறுபாடுகளில் ஜியோ 4ஜி வோல்ட் மொபைல்கள்.!

Written By:

சில மாதங்களுக்கு முன்னர் லீக்ஸ் தகவலாய் வெளியான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட் அம்சம் தொலைபேசிகளானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது மற்றும் இக்கருவிகள் இரண்டு செயலி மாறுபாடுகள் கொண்டு வெளியாகவுள்ளதாம்.

91மொபைல்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, லைஃப் தொலைப்பேசிகளின் பின்னால் இருக்கும் ரிலையன்ஸ் ரீடெயில்ஸ் நிறுவனம் ஏற்கனவே இக்கருவிகள் உற்பத்தியை தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த 4ஜி வோல்ட் அம்ச மொபைல் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கருவிகள் சார்ந்து வெளியான சுவாரசியமான தகவல்களை இங்கு காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
4ஜி சிம் மற்றும் ஜியோ அப்ளிகேஷன்ஸ்

4ஜி சிம் மற்றும் ஜியோ அப்ளிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் மற்றும் ஜியோ அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் இந்த குறைந்த விலையிலான மொபைல் போன்களுடன் கிராமப்புற சந்தையைத் தக்கவைத்துக்கொள்ள முகேஷ் அம்பானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொலைபேசியின் விலை

தொலைபேசியின் விலை

வெளியான அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட் மொபைல்கள் க்வால்காம் மற்றும் ஸ்ப்ரெட்ட்ரம் சிப்செட்களுடன் கிடைக்கும். க்வால்காம் சிப் கொண்ட மாதிரியானது தோராயமாக ரூ.1,800/- என்ற விலை நிர்ணயம் பெறலாம்.

ரூ,1,740/-

ரூ,1,740/-

மறுபக்கம் ஸ்ப்ரெட்ரம் மாறுபாடு 27 டாலர்கள் அதாவது சுமார் ரூ,1,740/- என்பதற்கும் குறைவாக விலை நிர்ணயத்தை பெறலாம். இந்த ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் அறிமுகத்தை வழியாக 110 மில்லியன் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.

ரூ.999/- தொடங்கி ரூ.1,500/-க்குள்

ரூ.999/- தொடங்கி ரூ.1,500/-க்குள்

ஆக ஜியோ 4ஜி கருவிகள் அறிமுகமான ஆரம்பத்தில் மிகவும் குறைந்த விலை நிர்ணயம் கொண்டு வெளியிடப்படலாம். அதாவது சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவல்களின்படி ரூ.999/- தொடங்கி ரூ.1,500/-க்குள் விலை நிர்ணயம் பெறலாம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட தொலைபேசிகள் 2.4 அங்குல டிஸ்பிளே, 512எம்பி ரேம், மைக்ரோ அட்டைகள், 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் விஜிஏ முன்பக்கம் கேமரா ஆகிய அம்சங்களுடன் 4ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆதரவுடனான அடிப்படை வன்பொருள் கொண்டு இயங்கும் ஒரு சாதனமாக வெளியாகலாம்.

வைஃபை, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ்

வைஃபை, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ்

4ஜி இணைப்பிற்கான ஜியோ சிம் தவிர, வயர்லெஸ் டேஷரிங் விருப்பம் சார்ந்த இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை என்றாலும், வைஃபை, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களை இக்கருவி கொண்டுருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசைப்பலகை

விசைப்பலகை

மேலும் ஜியோ 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட கருவி என்று வெளியான புகைப்படத்தில், கருவியின் திரையின் கீழே ஆல்ப்ரானியக் விசைப்பலகை யில் மைஜியோ, ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோம்யூசிக பயன்பாடுகளுக்கான பொத்தான்களை காண முடிகிறது.

லோ-எண்ட்

லோ-எண்ட்

இந்த ஜியோ 4ஜி வோல்ட் போன்கள், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிராமப்புற சந்தையிலும், அதிவேக இண்டர்நெட் உடனான லோ-எண்ட் மொபைல்களை எதிர்நோக்கும் பயனாளர்களுக்குள் ஊடுருவ உதவும் என்பதில் சந்தேகமேயில்லை.

காரணங்கள்

காரணங்கள்

மேலும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஆறு மாத காலத்திற்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளைத் இலக்காக கொண்டு களமிறங்கவுள்ளது. அதற்கு உதவும் வண்ணம் வளர்ச்சிக்கு தகுதியற்ற கிராமப்புற பிரிவு மற்றும் சிறப்பான அதே சமயம் இந்திய சந்தையில் மலிவான 4ஜி மொபைல்களுக்கான தேவை ஆகிய காரணங்கள் ஜியோ நிறுவனத்திற்கு நிச்சயமாக கைகொடுக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Reliance Jio 4G VoLTE Feature Phones’ Specifications, Price Leaked, Said to Launch Soon. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot