நம்பர் 1 ஆனது ஜியோ, பகிரங்கமாக தோற்றுப்போனது ஏர்டெல்.!

இனி ஏர்டெல் நிறுவனத்தினால் "இந்தியாவின் மிக வேகமான 4ஜி" என்று விளம்பரம் கூட செய்ய முடியாது.!

|

சமீபத்தில் "இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வர்க்" என்ற ஏர்டெல் நிறுவனத்தின் "பொய்யான" விளம்பரத்தை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது ட்ராய், அதாவது இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் கீழ் பார்க்கும் போது ஏர்டெல் தானாகவே அதன் 'பாஸ்டஸ்ட் 4ஜி' விளம்பரத்தை நிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்தியாவில் எந்த சேவை மிகத்துரிதமாய் வேகமான 4ஜி பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது என்ற மார்ச் மாதத்திற்கான அறிக்கையை ட்ராய் வெளியிட்டுள்ளது இதில் கடும் போட்டிகளை நிகழ்த்தும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் எந்தெந்த இடத்தை பெற்றுள்ளன என்பதை நீங்களே பாருங்களேன்.

ஏர்டெல் படுதோல்வி

ஏர்டெல் படுதோல்வி

வெளியான ட்ராய் அறிக்கையின் கீழ் மிக வேகமான 4ஜி சேவையை வழங்கும் என்று விளம்பரம் செய்து வந்த ஏர்டெல் நிறுவனத்தை ஜியோ தோற்கடித்திருந்தால் கூட பரவாயில்லை ஐடியா நிறுவனமே தோற்கடித்துள்ளது என்பது தான் இங்கு சுவாரசியம்.

மிக வேகமான 4ஜி சேவை

மிக வேகமான 4ஜி சேவை

அதாவது ஜனவரி மாதத்தில் நான்காம் இடத்தில இருந்த ஜியோ, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மிக வேகமாக 4ஜி நெட்வொர்க் வழங்கும் நிறுவனமாக முதலிடம் வகித்தது. இப்போது மீண்டும் மார்ச் மாதத்தில் மிக வேகமான 4ஜி சேவை வழங்கிய நிறுவனமாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

16.487எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகம்

16.487எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகம்

இரண்டாவது மிக வேகமான 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக ஐடியா நிறுவனம் திகழ்கிறது. ட்ராயின் மாய்ஸ்பீட் ​​பயன்பாட்டின்படி ஜியோ சராசரியாக 16.487எம்பிபிஎஸ் 4ஜி மொபைல் பதிவிறக்க வேகம் வழங்க ஐடியா 12.092எம்பிபிஎஸ் வேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

இந்த போட்டியில் நான்காம் இடத்தில உள்ள வோடபோன் நிறுவனத்தின் 7.933எம்பிபிஎஸ் வேகத்தை விட அதிகமாக வழங்கி மூன்றாம் இடத்தில் ஏர்டெல் நிறுவனம் (10.439எம்பிபிஎஸ்) உள்ளது. ஐந்தாம் இடத்தில ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2.958எம்பிபிஎஸ் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவேற்ற வேகம்

பதிவேற்ற வேகம்

இந்தியாவின் மிக வேகமான 4ஜி மொபைல் பதிவேற்ற வேகம் வழங்கும் நிறுவனங்கள் என்று பார்த்தால் ரிலையன்ஸ் ஜியோ பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. ஐடியா 6.536எம்பிபிஎஸ் என்ற சராசரி பதிவேற்ற வேகத்தை வழங்கி இந்த பிரிவில் முதல் இடம் வகிக்கிறது.

இரண்டாவது இடத்தில் ஏர்டெல்

இரண்டாவது இடத்தில் ஏர்டெல்

அதனை தொடர்ந்து வோடபோன் (5.429எம்பிபிஎஸ்) இரண்டாவது இடத்திலும், ஏர்டெல் (4.455எம்பிபிஎஸ்) மூன்றாவது இடத்திலும், ஜியோ நான்காவது இடத்திலும் (1.490எம்பிபிஎஸ் ) தொடர்ந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (3.581எம்பிபிஎஸ்) ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

ஜியோ வேகம் அதிகரித்துள்ளது

ஜியோ வேகம் அதிகரித்துள்ளது

இந்த அடிப்படையில் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பீடு நிகழ்த்தினால் ஐடியா செல்லுலாரின் சராசரி 4ஜி பதிவேற்ற வேகம் 7.497எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து 6.536எம்பிபிஎஸ் என்று நலிவுற்றுள்ளது. மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ 2.208எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து 3.581எம்பிபிஎஸ் என்று அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

3 முதல் 6 மாதங்களுக்கு இலவச ஜியோ டிடிஎச் சேவை, ரெடியா இருங்க.!

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G Download Speed Fastest in India, Continues to Lag in Uploads: TRAI Data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X