Home
Mobile

Redmi நீ தான் இனி ராஜா.. 1.6 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, 108MP OIS கேமரா, IP66 ரேட்டிங் உடன் புது 5G போன்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது வருகிற ஜனவரி 6 ஆம் தேதி அன்று, அதன் ரெட்மி நோட் 15 சீரீஸ் (Redmi Note 15 5G Series) அறிமுகத்துடன் இந்தியாவில் அதன் புத்தாண்டை தொடங்குகிறது. இந்த சீரீஸின் கீழ் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அவைகள் ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) மற்றும் ரெட்மி நோட் 15 5ஜி 108 மாஸ்டர் பிக்சல் எடிஷன் (Redmi Note 15 5G 108 Master Pixel Edition) ஸ்மார்ட்போன்கள் ஆகும். அறிமுகத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

Redmi நீ தான் இனி ராஜா.. 1.6 நாட்கள் நீடிக்கும் பேட்டரி!

எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) பகிர்ந்துள்ள விவரங்களின் படி, ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், முன்னதாக (கடந்த ஆண்டு) வெளியான ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,999 க்கு அறிமுகமானது.

அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரெட்மி நோட் 15 5ஜி மற்றும் ரெட்மி நோட் 15 5ஜி 108 மாஸ்டர் பிக்சல் எடிஷன் ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் எம்ஐ.காம் (Mi.com) வழியாக கிடைக்கும் என்பதை ரெட்மி நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ டீஸர்களின்படி, ரெட்மி நோட் 15 5ஜி 108 மாட்ஸர் பிக்சல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பெயர் குறிப்பிடுவது போலவே 108MP கேமராவை கொண்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்சாரின் பெயர் அல்லது அளவு குறித்து ரெட்மி நிறுவனம் எந்த விவரக்குறிப்புகளையும் வழங்கவில்லை என்றாலும், இந்த கேமரா OIS ஆதரவுடன் 4K வீடியோ பதிவை ஆதரிக்கும்.

மேலும் ஷாவ்மீ, இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் வழியாக அதன் சொந்த லைவ் போட்டோக்களின் பதிப்பை 'டைனமிக் ஷாட்' என்று தொகுத்து, போர்ட்ரைட் மோட் இல் பல போக்கால் லெங்த் விருப்பங்களையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் ஒரு இரண்டாம் நிலை கேமராவும் உள்ளது, இது அல்ட்ராவைடு லென்ஸாக இருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 3 Chipset) உடன் வரும். இதே சிப்செட் தான் சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) ஸ்மார்ட்போனிலும் உள்ளது. இது கீக்பெஞ்சில் (Geekbench) முறையே 1,023 மற்றும் 2,690 என்ற சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் மதிப்பெண்களை பெற்றுள்ளதால், நல்ல பெர்பார்மென்ஸை எதிர்பார்க்கலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கர்வ்டு AMOLED டிஸ்பிளே கொண்டிருக்கலாம், அது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் அளவை கொண்டிருக்கலாம். சுவாரசியமாக இந்த டிஸ்பிளே - ஈரமான விரல்களால் கூட எளிமையாக பயன்படுத்த அனுமதிக்கும் ஹைட்ரோ டச் 2.0 அம்சத்தையும் ஆதரிக்கும்.

மேலும் ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனானது தூசி மற்றும் நீர் ஆதாரங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக IP66 மதிப்பீட்டை பெறும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,520mAh பேட்டரியை கொண்டிருக்கும். மற்ற பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, இது சற்றே சிறிய பேட்டரி ஆக தெறிந்தாலும், அதிகாரப்பூர்வ டீஸர்கள் இந்த பேட்டரி 1.6 நாட்கள் நீடிக்கும் என்று கூறுகின்றன

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi You Are The King Now New 5G Phone With 1 6 Days Battery 108MP OIS Camera IP66 Rating Jan 6 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X