அமேசான்: அதிரடி விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மீ வ்யை2.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அமேசான், மி.காம் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக தங்கம், ரோஸ், சாம்பல் போன்ற நிறங்களில் இந்த ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று சியோமி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.500 வரை விலைகுறைக்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 625
ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ வ்யை2
ஸ்மார்ட்போன்.

மெமரி
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக்
கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை
ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.9,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications