Redmi நோட் 8 2021 என்ற புதிய மாடல் 4 கேமராவுடன் அறிமுகமாகிறது தெரியுமா?
சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான Redmi விரைவில் புதிய Redmi note 8 2021 என்ற மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடல் சாதனம் உலகளவில் சுமார் 25 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்ததைத் தொடர்ந்து நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய நோட் 8 2021 ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் வரும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நோட் 8 2021 சாதனம் அறிமுகமாகிறதா?
கூடுதலாக, நோட் 8 2021 சாதனம் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், இது 48 மெகா பிக்சல் சென்சார் கொண்ட ஒரு முதன்மை ஷூட்டருடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று ரெட்மி கூறியுள்ளது. ஆனால், மீதமுள்ள சென்சார் தொகுதிகள் பற்றி ரெட்மி இன்னும் எதுவும் சொல்லவில்லை. முந்தைய அறிக்கைகள் படி இது அல்ட்ராவைட், மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்களுடன் இணைக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், அதன் தீர்மானங்கள் இன்னும் தெரியவில்லை.

ஹீலியோ ஜி 85 சிப்செட் மற்றும் 22.5W சார்ஜிங் அம்சம் இருக்கிறதா?
ரெட்மி நிறுவனம் பகிர்ந்த படங்களில் ஒன்று புதிய நோட் 8 2021 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடரைக் கொண்டிருக்கும் என்பதை காட்டியுள்ளது. அதேபோல், இந்த சாதனம் ப்ளூ மற்றும் வைட் ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என்பதைக் காண்பிக்கிறது. நோட் 8 2021 மாடல் கடந்த 2019 ஆண்டு வெளியான அசல் நோட் 8 ஐப் போலவே தோன்றுகிறது. புதிய நோட் 8, ஹீலியோ ஜி 85 சிப்செட் மற்றும் 22.5W சார்ஜிங் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

6.3" இன்ச் கொண்ட 1080p டிஸ்பிளே
நிச்சயமாக, அதன் திரை தெளிவுத்திறன் மற்றும் கேமராக்கள் பற்றி நாம் இன்னும் கேட்கவில்லை, ஆனால் கூட அவற்றில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று நம்பப்படுகிறது. அதாவது ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 6.3" இன்ச் கொண்ட 1080p தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், இது 13 மெகா பிக்சல் கொண்ட செல்பி சென்சார் உடன் வெளி வரும் என்று எதிர்பார்ப்பாகிறது.

எதிர்பார்க்கப்படும் கேமரா அம்சம்
அதேபோல், முன்பே தெரிவித்திருந்தது போல ரெட்மி நோட் 8 2021 சாதனம் 48 மெகா பிக்சல் சென்சார் கொண்ட ஒரு முதன்மை ஷூட்டருடன் 8 மெகா பிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கொண்ட தொகுதிகளுடன் இந்த புதிய சாதனம் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 8 2021 இன் கூடுதல் அம்சங்களை ரெட்மி எதிர்வரும் நாட்களில் உறுதிப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். புதிய ரெட்மி நோட் 8 2021 பற்றிய கூடுதல் தகவலுக்கு கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








