Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புது ரெட்மி 5ஜி போன்..10000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவேதான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி.

அதாவது ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி டர்போ 6 மேக்ஸ் (Redmi Turbo 6 Max) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் டூயல் ரியர் கேமரா மற்றும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புது ரெட்மி 5ஜி போன்..

ரெட்மி டர்போ 6 மேக்ஸ் அம்சங்கள் (Redmi Turbo 6 Max Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9600எஸ் சிப்செட் (Dimensity 9600s chipset) உடன் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

7-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி டர்போ 6 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. அதேபோல் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த ரெட்மி போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபொல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவு இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் ரெட்மி டர்போ 6 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி டர்போ 6 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers),போன்ற அம்சங்கள் இந்த புதிய போனில் இருக்கும். மேலும் இந்த ரெட்மி டர்போ 6 மேக்ஸ் போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான வசதிகள் உடன் இந்த ரெட்மி டர்போ 6 மேக்ஸ் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Photo Credit: Nokia Power User

Best Mobiles in India

English summary
Redmi Turbo 6 Max images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X