Home
Mobile

Redmi-யின் புது ராட்சசன்.. 10000mAh பேட்டரி, 7-இன்ச் 2K டிஸ்பிளே, IP69 உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனம் ஆனது முரட்டுத்தனமான அம்சங்களை கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் சீரீஸில் பணியாற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது ரெட்மி டர்போ 6 சீரீஸ் (Redmi Turbo 6 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சீரிஸின் கீழ் ஒரு ஸ்டாண்டர்ட் (Standard) மாடல் மற்றும் ஒரு மேக்ஸ் (Max) மாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ரெட்மி டர்போ 6 (Redmi Turbo 6) மற்றும் ரெட்மி டர்போ 6 மேக்ஸ் (Redmi Turbo 6 Max) ஆகிய 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிக்காச்சு (Smart Pikachu) வழியாக இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Redmi-யின் புது ராட்சசன்.. 10000mAh பேட்டரி, 7-இன்ச் 2K டிஸ்பிளே, IP69

அதன்படி, ரெட்மி டர்போ 6 சீரீஸ் மாடல்கள் ஆனது மிகப்பெரிய 7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 10,000mAh பேட்டரியுடன் வரவுள்ளன. ஸ்டாண்டர்ட் ரெட்மி டர்போ 6 மாடலானது டிமென்சிட்டி 6 சீரீஸ் சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. இது TSMC-யின் 3என்எம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும், வரவிருக்கும் டிமென்சிட்டி 8600 (Dimensity 8600) சிப்செட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வண்ணம் இதே டிமென்சிட்டி 6300 சிப்செட் தான், வரவிருக்கும் ஹானர் பவர் 3 (Honor Power 3) மாடலிலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் தான் இன்னும் பெரிய 12,000mAh பேட்டரி இருக்கலாம் என்றும் வதந்திகள் உள்ளன.

மறுபுறம் உள்ள, ரெட்மி டர்போ 6 மேக்ஸ் மாடலானது டிமென்சிட்டி 9 சீரிஸ் சிப்செட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வரவிருக்கும் டிமென்சிட்டி 9600எஸ் (Dimensity 9600s) ப்ராசஸர் இடம்பெறலாம் என தெரிகிறது, இருப்பினும் சிப்செட்டின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

முன்னதாக வெளியான அறிக்கைகள் ஆனது, டர்போ 6 மேக்ஸ் மாடலில் 2கே ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளே இடம்பெறும் என்றும், இதில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், உலோகத்தாலான நடுப்பகுதி கட்டமைப்பு (metal middle frame) மற்றும் தூசி மற்றும் நீர் புகாத தன்மைக்கான IP68/IP69 தரநிலைகள் ஆகியவை இடம்பெறலாம் என்கின்றன

ரெட்மி தேர்போ 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? ரெட்மி டர்போ 6 மேக்ஸ் (Redmi Turbo 6 Max) மாடல் ஆனது 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் ஸ்டாண்டர்ட் ரெட்மி டர்போ 6 (Redmi Turbo 6) மாடலும் அறிமுகமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன்: கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி, ரெட்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகவும், இந்திய சந்தைக்கு வந்த முதல் ரெட்மி டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கவும் ஆகவும் - ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மாடல் அறிமுகமாகி இருந்தது. ஆக நாம் ரெட்மி டர்போ 6 சீரீஸையும் இங்கே எதிர்பார்க்கலாம்.

ரெட்மி தார்பொ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.37,999 ஆகும். இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.40,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Asphalt Black, Nitro Blue மற்றும் Turbo White ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- 6.59-இன்ச் 1.5கே (1,268 × 2,756 பிக்சல்கள்) 12-பிட் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
- 3டி ஐஸ்-லூப் கூலிங் (3D Ice-Loop Cooling) சிஸ்டம்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.5) சென்சார் (Sony IMX882) பிரைமரி கேமரா
- இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகியவைகளை கொண்டுள்ளது
- 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா
- 20 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா

- 7,540mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இது IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்

Best Mobiles in India

English summary
Redmi Turbo 6 and Redmi Turbo 6 Max to pack Dimensity Chipsets and 10000mAh Battery Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X