மொத்த இந்தியா வெயிட்டிங்.. 7560mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே!
இந்தியாவில் இருக்கும் ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ரெட்மி டர்போ 5 (REDMI Turbo 5) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. சிப்செட், கேமரா மற்றும் டிசைன் பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.
இருப்பினும், சீன மார்கெட்டில் ஜனவரி மாதமே வெளியாகிவிட்டதால், முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள முடியும். வருகிற ஜூன் 16ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Dimensity 8500 Ultra) சிப்செட் வருகிறது.

24 ஜிபிக்கான ரேம் சப்போர்ட் கொடுக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 20 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்படுகிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. சீனாவில் எப்படி?
ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (REDMI Turbo 5 Specifications): 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது. 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கிடைக்கிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்தியாவில் 8 எம்பி செல்பீ மட்டுமே கிடைக்க இருக்கிறது. மற்ற கேமரா பீச்சர்களில் மாற்றமில்லை.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7560mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் மற்றும் 204 கிராம் எடை கொடுத்துள்ளது. பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.
இன்பிராரெட் சென்சாரும் கொடுக்கப்பட்டு உள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இதில் செல்பீ கேமராவை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. சீன மார்கெட்டில் இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.27,000 பட்ஜெட்டில் இருக்கிறது.
இந்திய மார்கெட்டில் எப்படி பார்த்தாலும் ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். 24 ஜிபி வரையில் ரேம் கொடுக்கும் மாடலாக இருக்கிறது. ஆகவே, டாப்-எண்ட் மாடலின் விலை கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவிலும் பெரிய பேட்டரி மற்றும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட சிப்செட் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
ஆகவே, இந்தியாவில் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ரெட்மி டர்போ 5 ப்ரோ மற்றும் ரெட்மி டர்போ 5 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் இந்தியாவில் வெளியாவது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. இருப்பினும், ரெட்மி டர்போ 5 வெளியீட்டுக்கு பிறகு தெரியவரும்.


Click it and Unblock the Notifications