தலைவன் வேற ரகம்.. 120Hz டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 50MP OIS கேமரா.. புது REDMI போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் ரெட்மி டர்போ 5 (REDMI Turbo 5) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. 120Hz ப்ளூயிட் டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. வருகிற ஜூன் 16 ஆம்தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், சிப்செட், கேமரா, டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இதில் டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் மிரளவிடும்படி இருக்கிறது. அமேசான் மற்றும் எம்ஐ இந்தியா தளத்தில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கையில், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 8500 Ultra) சிப்செட்டை இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் கிடைக்கிறது.
12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபிக்கான ரேம் அவுட்புட் கொடுக்கப்படும். டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மட்டுமல்லாமல், எலர்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவ இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 20 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு கிளாரிட்டி மற்றும் லேக் ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்க அடாப்டிவ் 120Hz ப்ளூயிட் டிஸ்பிளே (Adaptive 120Hz Fluid Display) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்படுகிறது.
100W ஹைப்பர் சார்ஜிங் கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. பேட்டரி, கூலிங் டெக்னாலஜி, ஓஎஸ் அப்டேட் உள்ளிட்ட விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே, இப்போது வரையில் வெளியாகி இருக்கின்றன. மற்ற விவரங்களை வெளியீட்டுக்கு முன்பு எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், சீனாவில் இது ஏற்கனவே வெளியான மாடலாக இருப்பதால், இதில் கிடைக்க இருக்கும் பீச்சர்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். ஆகவே, சீன வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் 7560mAh பேட்டரி கிடைக்கிறது. பேட்டரியுடன் 8.18 மிமீ தடிமன் கொடுக்கிறது.
204 கிராம் எடை கொடுத்துள்ளது. 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, காம்பாக்ட் டிசைனில் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைத்துள்ளது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதே பீச்சர்களை இந்திய வெர்ஷனில் எதிர்பார்க்கலாம். சீனாவில் ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருந்தது. இந்தியாவில் சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications