ஒத்த போனுக்கு மொத்தமா மிரளுது.. 7560mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் உறுதியானதை அடுத்து இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் ரெட்மி டர்போ 5 மற்றும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஆகிய மாடல்கள் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இதனால், அந்த மாடல்களின் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகின.

இப்போது, ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் உறுதியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7560mAh பேட்டரி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனை போலவே 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது. 6.59 இன்ச் டிஸ்பிளே மட்டுமே இதில் கொடுக்கப்பட உள்ளது.
ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 2.5D கிளாஸ் பேக் கொடுத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (Octa Core MediaTek Dimenisty 8500) சிப்செட்டை இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 7560mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பேட்டரிக்கு 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 100W பிபிஎஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. மேலும், 3டி ஐஸ்-சீல்டு சர்குலேஷன் கூலிங் பம்ப் (3D Ice-Sealed Circulation Cooling Pump) கொடுக்கப்பட்டு உள்ளது. ஒயிட் (White) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) கலர்களில் வருகிறது.
சீன மார்கெட்டில் 2,000 யுவான் பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.26,372 ஆக இருக்கிறது. இதே ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனானது, குளோபல் மார்கெட்டில் போகோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro) மாடலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டிலும் இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்பனை எதிர்பார்க்கலாம். ரூ.25,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரலாம்.
மேலும், ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கையில், 1.5K ரெசொலூஷன், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் கிடைக்க இருக்கிறது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core Mediatek Dimensity 9500s) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9000mAh பேட்டரி பேட்டரி கிடைக்கிறது. இந்திய மற்றும் குளோபல் மார்கெட்டில் போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலாக வெளியாக இருக்கிறது. ரூ.33,000 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








