Redmi ருத்ர தாண்டவம்.. 7540mAh பேட்டரி, 100W சார்ஜிங், IP69K உடன் புது 5ஜி போன் அறிமுகம்.. June 19 ஆபர் SALE!
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகவும், இந்தியாவில் அறிமுகமான முதல் டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆகவும் - ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமானது. மொபைல் கேமர்கள் மற்றும் பெஸ்ட் பெர்பார்மென்ஸை விரும்புவோரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த 'அப்பர் மிட்-ரேஞ்ச்' (upper mid-range) சிப்செட் மற்றும் மிகப்பெரிய பேட்டரி ஆகியவற்றின் கலவையாக வெளிவந்துள்ளது
ரெட்மி டர்போ 5 விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.35,999 ஆகவும், 12ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.38,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமேயான அறிமுக விலைகளாகும்.

சலுகைகளை பொறுத்தவரை எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.2,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் விற்பனை ஜூன் 19 அன்று மதியம் 12 மணி முதல் அமேசான்.இன், எம்ஐ.காம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகள் மூலம் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் தேர்போ ஒயிட், நிட்ரோ ப்ளூ மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.
ரெட்மி டர்போ 5 அம்சங்கள்:
- 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)
- 1268 x 2756 பிக்சல் ரெசல்யூஷன்
- MediaTek Dimensity 8500 Ultra சிப்செட் மூலம் இயங்குகிறது
- 12GB LPDDR5X ரேம் (RAM) மற்றும் 512GB வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜ்
- நீண்ட நேர கேமிங் மற்றும் அதிக பணிச்சுமையின் போது வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இதில் உள்ள பெரிய 5,300mm² வேப்பர் சேம்பர் (vapour chamber) கூலிங் சிஸ்டம் உதவும்.
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS வசதியுடன் கூடிய 50MP Sony IMX882 ப்ரைமரி சென்சார்
- 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியானது குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் ஏற்படும் மங்கலான தன்மையைக் குறைக்க உதவும்; அதேவேளையில், அல்ட்ரா-வைட் கேமரா பரந்த நிலப்பரப்பு மற்றும் க்ரூப் புகைப்படங்களை எடுப்பதில் கூடுதல் வசதியை அளிக்கிறது.
- 20MP செல்பீ கேமரா
- ரியர் கேமராக்களில் பல வண்ணங்களிலான LED பிக்சல் மேட்ரிக்ஸ் வளையங்கள் (rings) இடம்பெற்றுள்ளன. இது கால் அறிவிப்புகள், சார்ஜிங், மீடியா மற்றும் கேமிங் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்ப இவற்றை முழுமையாக பெர்சனலைஸ்டு செய்து கொள்ள முடியும். இது ஸ்மார்ட்போனின் அழகை கூட்டுவதுடன், ஸ்மார்ட்போன் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும்போது பல்வேறு தகவல்களை நினைவூட்டும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது.
- 7,540mAh திறன் கொண்ட பேட்டரி
- 100W HyperCharge வசதி
- IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் தரநிலைகள்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Hyper OS 3
- அளவீட்டில் 157.5 x 75.2 x 8.2 மிமீ உள்ளது; இது கச்சிதமான வடிவமைப்பு ஆகும்; கையாள்வது எளிதாக இருக்கும். - எடை 200 கிராமுக்கு மேல் இருந்தாலும், இதில் உள்ள மிகப்பெரிய பேட்டரி திறனைக் கருத்தில் கொள்ளும்போது அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே ஆகும்.
கிஸ்பாட்டின் கருத்து: செயல்திறன் மற்றும் பேட்டரி லைஃப்பிற்கு முதலிடம் அளிக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்தே ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் உள்ள டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் ஆனது - மேம்பட்ட கூலிங் சிஸ்டம் மற்றும் பெரிய அளவிலான பேட்டரி ஆகியவை, மொபைல் கேமர்கள் மற்றும் பவர் யூசர்களுக்கு (power users) இதனை ஒரு சிறந்த தேர்வாக மாற்றுகின்றன.
இருப்பினும், கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு, இதே பிரிவில் உள்ள மற்ற சில ஸ்மார்ட்போன்கள் - பிரத்யேக டெலிஃபோட்டோ சென்சார்கள் (telephoto sensors) உள்ளிட்ட - மிகவும் விரிவான கேமரா அமைப்புகளை வழங்கக்கூடும். அதாவது ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது மொபைல் போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி ஆர்வலர்களுக்கானது அல்ல.


Click it and Unblock the Notifications