Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்டில் 7540mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 7540mAh பேட்டரி மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகிய ரெட்மி டர்போ 5 (REDMI Turbo 5) ஸ்மார்ட்போனானது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து நேரடியாக ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி மற்றும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.5,000 டிஸ்கவுண்ட்டில் 7540mAh பேட்டரி!

ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (REDMI Turbo 5 Specifications): 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக 3840Hz PWM டிம்மிங் பிரிகொன்சி கிடைக்கிறது. டிசி டிம்மிங் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. பிரீமியம் அவுட்டோர் அவுட்புட் கொடுக்கும்படி 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 Ultra 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சிப்செட்டுடன் ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் மாடலும் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கொண்ட மாடலாக இந்த ரெட்மி டர்போ 5 இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) கிடைக்கிறது.

8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 1080p ரெக்கார்டிங் கொண்ட 20 எம்பி ப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி20பி சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ரெட்மி டர்போ 5 இருக்கிறது.

7540mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் மற்றும் 204 கிராம் எடை கிடைக்கிறது. பிரீமியம் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் இன்பிராரெட் சென்சார் உள்ளது.

Best Mobiles in India

English summary
REDMI Turbo 5 With 12GB RAM Gets Rs 5000 Discount on Amazon Great Indian Festival Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X