Home
Mobile

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. நம்பமுடியாத கம்மி விலையில் ரெட்மி 5ஜி போன்.. 7540mAh பேட்டரி எந்த மாடல்?

அமேசான் தளத்தில் பிரைம் டே சேல் (amazon prime day sale) எனும் சிறப்பு விற்பனை வரும் ஜூலை 4-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5ஜி போன் ஒன்றும் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) போன் தற்போது ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஜூலை 4-ம் தேதி நடைபெறு உள்ள சிறப்பு விற்பனையில் இந்த ரெட்மி மாடலை ரூ.33,999 விலையில் வாங்க முடியும். இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. நம்பமுடியாத கம்மி விலையில் ரெட்மி 5ஜி போன்!

ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 Specifications): 6.59-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரெட்மி டர்போ 5 போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), டிசி டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் டைமன்சிட்டி 8500-அல்ட்ரா 4எனம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 8500-Ultra 4nm SoC) சிப்செட் உடன் புதிய ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Arm Mail-G720 MC8 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளது.

அதேபோல் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி டர்போ 5 அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Xiaomi HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் ரெட்மி டர்போ 5 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 50MP Sony IMX882 ப்ரைமரி சென்சார் + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. நம்பமுடியாத கம்மி விலையில் ரெட்மி 5ஜி போன்!

ரெட்மி டர்போ 5 போன் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 6.0, கலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 7540எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி டர்போ 5 போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டர்போ ஒயிட், நிட்ரோ ப்ளூ மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க இந்த போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
REDMI Turbo 5 will be available for Rs.33999 during the Amazon Prime Day sale on July 4th
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X