இந்தியாவில் First time.. Redmi-யின் Performance கிங் வந்துட்டான்.. Ultra சிப், 7650mAh பேட்டரி, 100W சார்ஜிங்!
ரெட்மி (Redmi) நிறுவனம் ஆனது செயல்திறனை மையமாக கொண்ட ஒரு புதிய போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அது ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போன் ஆகும். வழக்கமாக ரெட்மி டர்போ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமே அறிமுகமாகும். ஆக இது - இந்திய சந்தைக்கு வரும் முதல் ரெட்மி டர்போ சீரீஸ் மாடலாக இருக்கும்.
அறியாதோர்களுக்கு ரெட்மி டர்போ ஸ்மார்ட்போன் சீரீஸ் - சீனாவில் மிகவும் பிரபலமான சீரிஸ்களில் ஒன்றாகும். இது செயல்திறனை மையமாக கொண்ட வன்பொருள் மற்றும் அம்சங்களுக்காக நன்கு அறியப்படுகிறது. ரெட்மி நிறுவனம் அதன் டர்போ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், பெரும்பாலும் இது சீன மாடலில் உள்ள அதே அம்சங்களை தான் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதென்ன அம்சங்கள்? எப்போது அறிமுகம்? என்ன விலைக்கு வரலாம்?

ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுகம் எப்போது? டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லான்ச் டைம்லைன், மற்றொரு டிப்ஸ்டர் ஆன சஞ்சு வழியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது
அவர் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 10 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று கணித்துள்ளார். இது உண்மையாக இருந்தால், ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை மிக விரைவில் அறிவிக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி, இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி டர்போ 5, சீன மாடலில் உள்ள அதே அம்சங்களை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இது ஒரு நல்ல செய்தியாகும், ஏனெனில் பிராண்டுகள் பொதுவாக சீனாவிற்கு வெளியே ஒரு போனை அறிமுகப்படுத்தும்போது, பேட்டரி திறன் போன்ற சில அம்சங்களை மாற்றுகின்றன. இந்த யூகத்தின் அடிப்படையில், ரெட்மி டர்போ 5-இடமிருந்து என்னென்ன அம்சஙகளை எதிர்பார்க்கலாம் என்கிற விவரங்கள் இதோ:
- 6.59-இன்ச் (1,268×2,756 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
- 50MP ப்ரைமரி கேமரா + 8MP கேமரா
- 20MP செல்பீ கேமரா
- 7,650mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங்.
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 3
ரெட்மி டர்போ 5 என்ன விலைக்கு வரலாம்? மேற்கண்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது, ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஓரளவு கச்சிதமான வடிவத்தில், செயல்திறனை மையமாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. டைமென்சிட்டி 8500 அல்ட்ரா, கேமர்கள் மற்றும் பவர் யூசர்களுக்கு முதன்மை நிலை செயல்திறனை வழங்கும்.
அதிக வேலைப்பளு கொண்ட பணிகளின் போதும், ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கு பேட்டரி திறன் போதுமானதை விட அதிகமாக உள்ளது. ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு, போட்டியாளர்கள் வழங்குவதை போல பன்முகத்தன்மை கொண்டதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் சாதாரண புகைப்படங்களுக்கு இது போதுமானதாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்த ரெட்மி ஸ்மார்ட்போன், ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடக்கூடும் என்பது போல் தெரிகிறது. ஆக ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விலை அப்பர் மிட்-ரேன்ஜில் தான் இருக்கும். அதாவது ரூ.40000 க்குள் இருக்கும்.


Click it and Unblock the Notifications