Home
Mobile

ஓரமா ஒத்துங்கடா சாமி.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. புது Redmi டர்போ போன்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி 9000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மடாலாக ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. இந்த புது ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) மூலம் கசிந்துள்ளன. மெட்டல் மிடில் ஃபிரேம், எல்டிபிஎஸ் டிஸ்பிளே, 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் போன்ற மொத்த பீச்சர்களிலும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி டர்போ 4 (REDMI Turbo 4) மற்றும் ரெட்மி டர்போ 4 ப்ரோ (REDMI Turbo 4 Pro) ஆகிய மாடல்கள் அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் களமிறங்கி மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. இதில் ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலில் 7550mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. ஆனால், இதை தூக்கி சாப்பிடும்படி ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் இருக்கப் போகிறது.

ஓரமா ஒத்துங்கடா சாமி! 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே!

சீன மார்கெட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஆகவே, ஓரிரு மாதங்களே இருப்பதால், அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிய தொடங்கிவிட்டது. இப்போது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலமாக முக்கிய பீச்சர்கள் கசிந்து, ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது. என்னென்ன பீச்சர்கள்,

ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 Specifications): இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. பெரிய பேட்டரி கிடைப்பதால், ரிவர்ஸ் சார்ஜிங் எதிர்பார்க்கலாம். 1.5K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.

மெட்டல் மிடில் ஃபிரேம் டிசைனில் டர்போ மாடல்களில் கிடைக்கும்படி கேமரா டிசைன் வர இருக்கிறது. ஃபுல் லெவல் வாட்டர் ப்ரூப் வர இருக்கிறது. ஆகவே, IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலமாக தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் முந்தைய வெர்ஷனில் இருந்து என்னென்ன அப்கிரேட் எதிர்பார்க்கலாம் என்பதை அப்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனில் 6550mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதை ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது.

இந்த டூயல் சிஸ்டம் டர்போ மாடல்களில் வழக்கமாக கிடைக்கிறது. ஆகவே, டர்போ 5 ஸ்மார்ட்போனிலும் அதை எதிர்பார்க்கலாம். 30 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது.

ஆகவே, டர்போ 5 ஸ்மார்ட்போனில் அப்கிரேடட் சிப்செட் கிடைக்கும். ஏற்கனவே, இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (MediaTek Dimensity 8500 Ultra) சிப்செட் கிடைக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மிகப்பெரும் பேட்டரி கொண்ட மாடலாக இருக்கப்போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 5 Tipped To Launch 9000mAh Battery 100W Fast Charging Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X