ஜன.29 க்கு அப்புறம் இதுதான்.. 9000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 16GB ரேம்.. ரெட்மி டர்போ 5 சீரிஸ்!
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி 9000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங் பீச்சர்களுடன் ரெட்மி டர்போ 5 சீரிஸ் (Redmi Turbo 5 Series) வெளியாக இருக்கிறது. இந்த மாடல்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மார்கெட்டில் மற்றொரு சீரிஸ் பெயரில் வெளியாக இருப்பது தெரிகிறது.
ரெட்மி நிறுவனத்தின் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களாக ரெட்மி டர்போ 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மற்றும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. வருகிற ஜனவரி 29ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்தியாவில் வெளியாக உள்ளது.

ஆனால், இந்திய மார்கெட்டில் போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போகோ எக்ஸ்9 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) ஆகிய மாடல்களாக வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெட்மி நிறுவனத்தின் முந்தைய மாடல்களும் இப்படித்தான், வெளியாகின. கூடுதலாக டிசைன், பேட்டரி மற்றும் பட்ஜெட் விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன.
ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 Specifications): 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் உள்ளது. ஒயிட் கலரில் கிடைக்க உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (MediaTek Dimensity 8500) சிப்செட் கிடைக்க இருக்கிறது. மேலும், மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Mali G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.
16 ரேம் கொண்டுள்ளது. டூயல் ரியர் கேமரா செட்டப் இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி பீச்சர்கள் வெளியாகிவிட்டன. ஆகவே, இதிலும் கிட்டத்தட்ட இதே பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை எதிர்பார்க்க முடியும்.
ரெட்மி டர்போ 5 மேக்ஸ் அம்சங்கள் (Redmi Turbo 5 Max Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட்டை இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், மாலி இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு (Mali Immortalis G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.
இதிலும் 16 ஜிபி ரேம் கொடுக்கப்பட உள்ளது. மேலும், 9000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டை கொடுக்கிறது. ஆரஞ்ச் மற்றும் ஸ்கை ப்ளூ கலர்களில் கிடைக்க உள்ளது. இதில் சிப்செட், பேட்டரி, டிசைன் விவரங்களை ரெட்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.
ஜனவரி 29ஆம் தேதி சீனாவில் வெளியாகி பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும். ஆகவே, பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும். இந்த ரெட்மி டர்போ 5 சீரிஸ் மாடல்களில் ஆரம்ப விலை ரூ.33,000 பட்ஜெட்டில் இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேக்ஸ் மாடலின் விலை அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








