Home
Mobile

மொத்தமும் ஒத்திடுச்சு.. 9000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. REDMI கமிறக்கும் டர்போ போன்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி 9000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக ரெட்மி டர்போ 5 ப்ரோ (Redmi Turbo 5 Pro) களமிறங்க இருக்கிறது. ஏற்கனவே, ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தன. இப்போது, இந்த ப்ரோ மாடலின் பீச்சர்கள் கசிந்துள்ளன. அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களை தூக்கிசாப்பிடும்படி இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பீச்சர்கள், வெளியீடு, விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி நிறுவனமானது, முன்னதாக ரெட்மி கே90 சீரிஸ் மாடல்களை களமிறக்கியது. இதில் அதிகபட்சமாக ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (REDMI K90 Pro Max) ஸ்மார்ட்போனில் 7560mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டது. அதேபோல ரெட்மி கே90 ஸ்மார்ட்போனில் 7100mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது.

மொத்தமும் ஒத்திடுச்சு.. 9000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்!

ஆனால், இந்த மாடல்களை தூக்கி சாப்பிடும்படி ரெட்மி டர்போ 5 மற்றும் ரெட்மி டர்போ 5 ப்ரோ ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இந்த மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அடுத்தாண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாக இருப்பது தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால், ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலானது, இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே வெளியானது. ஆகவே, அதேபோல ரெட்மி டர்போ 5 மற்றும் ரெட்மி டர்போ 5 ப்ரோ ஆகிய மாடல்கள் வெளியீடும் ஏப்ரலில் எதிர்பார்க்கலாம். இதற்கு ஏற்ப அந்த மாடல்களின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து வருகின்றன. இதில் டர்போ 5 ப்ரோ ஒட்டுமொத்தமாக மிரளவிடுகிறது.

ரெட்மி டர்போ 5 ப்ரோ அம்சங்கள் (Redmi Turbo 5 Pro Specifications): இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஎஸ் (LTPS) கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்க இருக்கிறது.

மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் ஃபுல் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. ஆகவே, IP68 + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கலாம். ஆக்டா கோர் மீடியாடெக் 9 சீரிஸ் (MediaTek Dimensity 9 Series) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் இவை தெரியவந்துள்ளன. முன்னதாக வெளியான ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) மற்றும் அட்ரினோ 835 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7550mAh பேட்டரி கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் வருகிறது. சீனாவில் ரூ.25,760 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, டர்போ 5 ஸ்மார்ட்போனை ரூ.30,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 5 Pro To Launch 9000mAh Battery 100W Fast Charging Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X